மானாவாரி பருத்தி :
நடவு செய்த 45 நாளில் மண் பரிசோதனைபடி மேலுரமிட வேண்டும். இல்லை எனில் ஏக்கருக்கு 8 கிலோ தழை சாது தரவல்ல உரத்தினை மண்ணில் ஈரம இருக்கும்போது இட்டு மண் அணைக்கவும்.
இறவை பருத்தி :
இரகங்களுக்கு 45-வது நாளில் மண் பரிசோதனைபடி மேலுரமிட வேண்டும் வீரிய ஒட்டு ரகங்களுக்கு நடவு செய்த 45 வது மற்றும் 65 வது நாளில் 16 கிலோ தலைச்சத்து தரவல்ல உரம் இடவேண்டும்.
பருத்தியில் நுண்ணுட்டச் சத்து பற்றாகுறையை நீக்குதல்:
பருத்தியில் நுண்ணுட்டச்சத்து பற்றாக்குறையால் இலைகள் சிவப்பாக மாறி மகசூலை பாதிக்கும் இக்குறைப்பட்டினை நீக்க மக்னீசியம் சல்பேட் 0.5 சதம், யூரியா 1 சதம் மற்றும் ஜிங்க்சல்பேட் 0.1 சதம் கலந்து கரைசலை நடவு செய்த 50-வது மற்றும் 80-வது நாட்களில் இலையின் மீது தெளிக்க வேண்டும்.
பருத்தி நுனிக்கிள்ளுதல்:
பருத்தி வளர்சியை கட்டுப்படுத்த அதிகம் வளர்ந்த நிலையில் எம்.சியு.15, எல்.ஆர்.ஏ.5166 இரகங்களில் 70-75வது நாளில் 14 கனு விட்டு நுனிக்கிள்ளுதல் வேண்டும்.
வீரிய ஒட்டு இரகங்களுக்கு 90வது நாளில் 20-வது கனு விட்டு நுனிக்கிள்ளுதல் வேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல்:
நாப்தலின் அசிட்டிலிக் அமிலம் 40 பிபிஎம் கரைசலை மொக்குவிடும் பருவத்தில் அதாவது விதைக்க 60வது நாள் ஒரு முறையும் மற்றும் 90ம் நாள் இரண்டாம் முறையும் தெளிக்க வேண்டும் (40 மில்லி நாப்தலின் அசிட்டிக் அமிலத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்தால் 40 பிபிஎம் கரைசல் கிடைக்கும்)