1.. யூரியாவிற்கு பதில் அமோனியம் குளோரைடு உரத்தை உவர் நிலத்தில் பயன்படுத்தக் கூடாது.
2.. யூரியாவிற்கு பதில் அமோனியம் சல்பேட் உரங்களை அமில நிலத்தில் பயன்படுத்தக் கூடாது.
3.. நாற்றங்காலில் DAP இடப்பட்டு இருந்தால், நடவு வயலில் சிபாரிசு செய்யப்படும் மணிச்சத்தில் 3ல் 1பங்கு இட்டால் போதும்.
4.. களிமண் அதிகமுள்ள வயலில் தழைச்சத்தில் 50 சதவீதம் அடியுரமாகவும், களிமண் குறைவான வயலில் 25 சதவீதம் அடியுரமாகவும் மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துடன் கலந்து இட வேண்டும்.
5.. பசுந்தாள் உரத்துடன் ராக்டாஸ்பேட் உரம் இடப்பட்டு இருந்தால் அடுத்து வரும் நெற்பயிருக்கு மணிச்சத்து உரமிட அவசியமில்லை.
6.. மேலுரம் இடுவதற்கு முன் வயலிலுள்ள தண்ணீரை வடித்துவிட்டு பிறகு உரமிட்டு, 24 மணிநேரம் கழித்து மீண்டும் தண்ணீர் கட்ட வேண்டும்.
7.. உயரமாக வளரக்கூடிய மற்றும் சாய்ந்து விடக்கூடிய இரகங்களுக்கு எக்டருக்கு 75 கிலோ தழைச்சத்து போதுமானது.