மக்காச்சோளத்தை தண்டு துளைப்பான் தாக்கி அதிக மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனைக் கட்டுப்படுத்த குருணை பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை பயன்படுத்தலாம்.
எப்படி பயன்படுத்தனும்?
குயினைல்பாஸ் 5 சத குருணை - 15 கிலோ (அல்லது) கார்பரில் 4 சத குருணை - 20 கிலோ இதில் ஏதேனும் ஒன்றை மணலுடன் கலந்து ஒரு ஹெக்டேருக்கு 50 கிலோ என்ற அளவில் விதைத்ததிலிருந்து 20 நாட்கள் வயதுடைய பயிர்களின் குருத்தில் இட வேண்டும்.
மக்காச்சோளத்தில் ஏற்படும் பூஞ்சாண நோயான அடிச்சாமபல் நோயை கட்டுப்படுத்த விதைத்த 20-வது நாளில் மெட்டலாக்ஸில் 72 சதம் நனையும் தூள் 1 கிலோவை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளின் மேல் நன்கு நனையும்படி கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.