நாற்றங்காலில் பலவகைகள் இருந்தும் சேற்று நாற்றங்கால் சிறப்பானது. ஏன்?

 |  First Published Jun 14, 2017, 12:23 PM IST
How to make seru natrangal and uses



 

சேற்று நாற்றங்கால் தயாரிப்பு முறை

Latest Videos

undefined

நடவு வயலில் நாத்து நடும் நாளை முதலில் முடிவு செய்ய வேண்டும்.  அதற்கு 25 நாட்கள் முன்பு நாற்றங்கால் விதைப்பு செய்யவேண்டும். 

விதைப்பு செய்ய எண்ணுகிற நாளுக்கு 15 அல்லது 20 நாட்களுக்கு முன்பே நாத்தங்கால் தயாரிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவேண்டும். அப்போழுதுதான் நாத்தங்கால் மிருதுவான சேற்றுடன் நல்ல அகழனி வாசனையுடன் இருக்கும். 

ஆக 45 நாட்களுக்கு முன் நாத்தங்காலில் நீர் பாய்ச்சி நன்கு ஊறியபின் செண்டுக்கு 100 முதல் 150 கிலோ தொழு எரு அல்லது கம்போஸ்டு எரு அல்லது பசுந்தாள் எருவானால் செண்டுக்கு 50 முதல் 75 கிலோ சமமாக  பரப்பி இருமுறை நாட்டு கலப்பையால் அல்லது பவர்டில்லரால் உழுது கொடுக்கவேண்டும். 

நாத்தங்காலுக்கு டிராக்டர் உழவு செய்யாமல் இருத்தல் மிக முக்கியம்.  இங்கே குறிப்பிடுகிற சாகுபடி பணிகள் அத்தனையும் நல்ல நாத்தங்கால் தயார் செய்ய இப்படித்தான் செய்ய வேண்டுமென கூறப்படுகிறது.

பத்து நாட்களுக்கு பிரகு மேலும் இருமுறை உழுது, பண்படுத்தி, பரம்பு அடித்து சம்மாக நிலத்தை தயார் செய்ய வேண்டும்.

அதன்பிறகு செண்ட் பாத்திகள் அமைக்க வேண்டும்.  அதாவது 16 மீட்டர் எஅலமும் 2 1/2 மீட்டர் அகலமும் (54 அடி நீளம் 8 அடி அகல்ம்) உள்ள பாத்திகள் அமைத்து பாத்திகளைச் சுற்றி அரை மீட்டர் (1 1/2 அடி) அகல வாய்க்கால்கள் அமைக்கவேண்டும்.

இந்த வாய்க்கால் நீர் பாய்ச்சுவதற்கும் அல்லது நீர வடிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.  இவ்வாறு பிரித்த ஒவ்வொரு செண்ட் பாத்தியிலும் 1 1/2 (அ) 2 கிலோ நெல் விதை தான் விதக்க வேண்டும்.

நாத்தங்காலில் விதைக்கு முன் விதைகளை எவ்வாறு முழுதும் முற்றிய விதைகளாக பிரித்து எடுத்து ஊர வைத்து முளைகட்ட வேண்டுமென்று முன் விவரித்துள்ளது.

விதைகளை குறைந்தது 24 மணி நேரம் ஊரவைக்க வேண்டும்.  பிறகு ஒரு மூலையில் குவித்தோ அல்லது சா க்குகளில் கட்டி அடுக்கியோ மேல் பரப்பை வைக்கோல் தாள்களால் அடர்த்தியாக மூடி அல்லது சாக்கினால் மூடி முளைபோடவேண்டும். 

வைக்கோல் போட்டு சீராக தண்ணீர் தெளித்து ஈரம் காயாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதனால் ஓரளவு வெப்பம் உண்டாகி விதைகளை முளைக்க ஆரம்பிக்கும்.

மூடிய 12 மணி நேரத்தில் இரண்டாம் கொம்பும் 24 மணி நேரத்தில் மூன்றாம் கொம்பும் முளையாக காணலாம்.  முளை கிளம்பிய விதைகளை நாற்றங்காலில் சீராக தெளிக்க வேண்டும். 

ஒரு ஏக்கர் நட 12 செண்ட் பாத்திகள் போதும். நாத்து காணாது என்று எண்ணுபவர்கள், மேலும் சில செண்ட் பாத்திகளை தயார் செய்து விதைக்கலாம்.  ஆனால் செண்டுக்கு 1 1/2 (அ) கிலோவுக்கு அதிகமாக விதை விதைக்ககூடாது.

முளைத்த நெல்லை நாத்தங்காலில் 3 அங்குல நீரை நிறுத்தி விதைக்க வேண்டும்.  நிலத்தை பரம்பு அடித்து சமன்படுத்திய உடன், மண் கலங்கியதாக இருக்கும்.

அப்பொழுது உடனேயே விதைத்தால்நெல் விதை கனம் காரணமாக உடனே அமிழ்ந்துவிடும்.

ஆனால் கலங்கிய நீரிலுள்ள மண்துகள்கள் விதையின் மேல் மெதுவாக படிந்து வெளிவரும் முளையை மூடி அதன் வளர்ச்சிக்கு இடையூறு செய்யும்.

ஆகவே பரம்பு அடித்ததும் இரண்டு மணி நேரம் கழித்து தெளிந்த நீரிலேயே விதை தெளிக்கவேண்டும்.  விதைத்த சில மணி நேரத்தில் நீரை வடித்துவிட வேண்டும். 

இவ்வாறு அடிக்கடி நீரை தேக்கியும் வடித்தும் ஈரம் காயாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாத்தங்கால் பராமரிப்பில் முக்கியமான சாகுபடிபணி நீர் பராமரிப்புதான்.

கரும்பச்சை நாத்துகள் நிறம் குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஏன் சேற்று நாற்றங்கால்?

நல்ல திடமான நாத்துக்கள் கீழ்கண்ட முக்கிய குணங்கள் பெற்று இருக்கவேண்டும்.

குட்டையாகவும், வீரியத்தோடும் வலிமையான தண்டு உடையதாகவும் இருக்கவேண்டும்.

கரும்பச்சை நிறத்துடன் இருக்கவேண்டும்.

ஐந்து குட்டை இலைகளுடையதாக இருக்கவேண்டும்.

வேர்கள் குட்டையாகவும், அடர்த்தியாகவும் கொத்தாகவும் எண்ணற்றும் பழுப்பான வெள்ளை நிறத்துடனும் இருக்கவேண்டும்.

எல்லா நாத்துக்களும் ஒரே சீரான வளர்ச்சியுண்டனும் சம உயரத்துடனும் இருக்க வேண்டும்.

நோய், பூச்சிகள் தாக்கப்படாமல் திடகாத்திரமாய் (Healthy) இருக்கவேண்டும்.  மற்றும் நாத்தின் இலை, தண்டுப்பகுதியில் அதிகமான தழைச்சத்தும், (Nitrogen) மாவுப் பொருளும் (Carbohydrate) இருக்கவேண்டும்.

சுருங்கக்கூறினால், மேலே சொன்னபடி நாத்தை பார்த்தால் வேர்ப்பகுதி, தண்டுப்பகுதியைவிட வீரியமுள்ளதாக தோன்றவேண்டும். 

பொதுவாக இந்த மாதிரி நாத்துக்கள் வயலில் நட்டவுடன் துரிதமாக பச்சை பிடித்து அதிக தூர்கள் உண்டாக ஊக்குவிக்கிறது.

click me!