நெல் சாகுபடியில் துத்தநாக சல்பேட் இடும்முறை…
undefined
ஒரு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்டத்தை 20 கிலோ மணலுடன் கலந்து பரம்படித்தபின், நடவிற்கு முன் சீராக வயலில் தூவ வேண்டும்.
இதனை கடைசி உழவில் போட்டு மண்ணில் ஆழப்புதையும்படி செய்தால், துத்தநாக பாஸ்பேட் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு பயிருக்கு கிடைக்காத நிலையை அடைந்து விடும்.
அடி உரமாக துத்தநாக சல்பேட் இடாவிட்டால் நட்ட 20, 30 மற்றும் 40-ம் நாளில் குறுகிய கால பயிருக்கு 30, 40, 50-வது நாளில் 0.5 சதவீதம் திரவமாக இலையில் தெளிக்கலாம்.
நெல் சாகுபடியில் சுண்ணாம்பு இடும்முறை
அமில நிலத்திற்கு மண்பரிசோதனை சிபாரிசுப்படி சுண்ணாம்பு இடுதல் வேண்டும். அல்லது ஒரு ஹெக்டேருக்கு 1.0-2.5டன் சுண்ணாம்பை கடைசி உழவில் போட்டு உழ வேண்டும். மேற்குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பை தொடர்ந்து 5 பயிருக்கு இடுதல் வேண்டும்.
நெல் சாகுபடியில் ஜிப்சம் இடும்முறை
களி அதிகம் உள்ள சுண்ணாம்பு இல்லாத மற்றும் சிறிதளவு களர் உள்ள நிலங்களில் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சத்தை மற்ற இரசாயன உரங்களுடன் கலந்து அடியுரமாக இட வேண்டும்.