வறட்சியைத் தாங்கி வளரும் பழமான சப்போட்டா சாகுபடி செய்யும் வழிகள்…

Asianet News Tamil  
Published : Aug 04, 2017, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
வறட்சியைத் தாங்கி வளரும் பழமான சப்போட்டா சாகுபடி செய்யும் வழிகள்…

சுருக்கம்

sapota cultivation of drought tolerance ...

சப்போட்டா பலவகைகளில் மிக சிறந்த பழம். பல சத்துக்களை தன்னுள் கொண்டுள்ள பலம் சப்போட்டா. வறட்சியைத் தாங்கி வளரும் பழ வகைகளில் இதுவும் ஒன்று. 

ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக வளர்க்க வேண்டிய பழ மரம். இரும்பு சத்து மற்றும் தாது உப்புகள் நிறைந்த பழம் வயிற்று புன்களை ஆறறும் சக்தி உடையது.

சப்போட்டாவில் பல ரகங்கள் உள்ளன, மிகவும் பிரபலமான ரகங்கள் பிகேஎம் 1, 2, 3,கோ 1, 2 மற்றும் கிரிக்கெட் பால், கீர்த்தி பர்த்தி ஆகியவை.

சப்போட்டா மரங்கள் 20 /20 அடி இடைவெளியில் நடப்படுகின்றன. சிலர் அடர்நடவு முறையில் 20 / 12 அடி முறையிலும் நடுகின்றனர்.

கன்றுகள் பொதுவாக ஆடி மாதத்தில் நடப்படுகின்றன. நடவு குழியில் கிளிஞ்சல் சுண்ணாம்பு, வேப்பம்புண்ணாக்கு கண்டிப்பாக இடவேண்டும். இதனுடன் தொழுவுரம் சேர்த்து  இடவேண்டும்.

சப்போட்டா வருடத்தில் இரண்டு முறை காய்க்கும். சில ரகங்கள் வருடம் முழுவுதும் காய்க்கும். PKM ரகங்களை விட கிரிக்கெட் பால் ரகம் சற்று குறைவாக காய்க்கும்.

வருடம் இரண்டு முறை சப்போட்டா மரங்களுக்கு சத்துகள் அளிக்க வேண்டும். மீன் அமிலம் பழஜீவாம்ருதரசல், VAM, மற்றும் உயிர் உரங்கள் தொடர்ச்சியாக தொழுஉரத்துடன் கலந்து இடுவதன் மூலம் அதிக சுவையான மற்றும் பழங்களை பெறலாம்.

சப்போட்டாவில் நோய்தாக்குதல் சற்று குறைவு. இயற்கை உரங்கள் இடுவதன் மூலமாக நோய்தாக்குதல்களில் இருந்து சப்போட்டாவை முற்றிலும் காப்பாற்றலாம்.

மீன் அமிலம் தெளிப்பதால் அதிகப்படியான பூக்கள் மற்றும் பழங்கள் பெறலாம்.

மரத்தில் உள்ள காய்களின் மேல் தோல் நகத்தன் மூலம் சுரண்டினால் மஞ்சள் நிறம் தோன்றினால் பறித்து பழுக்கவைக்கலாம், பச்சை நிறம் காணப்பட்டால் காய் என்று அர்த்தம்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!