சுரைக்காய் சாகுபடியில் அதிக மகசூல் கிடைக்க இயற்கை முறை தான் சிறந்தது…

 |  First Published Aug 3, 2017, 1:04 PM IST
The best way to get high yields in gourmet cultivation is best ...



சுரைக்காய் தமிழர்களின் உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர்சத்து அதிகம் உள்ள சுரைக்காய் பல்வேறு உணவு வகைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. மருத்துவ குணங்கள் கொண்ட காய்களில் சுரைக்காயும் ஒன்று.

சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். மஞ்சள் காமாலை நோயை தடுக்கலாம். உடல் சூட்டை தடுக்கும் அற்புதமான காய். பாஸ்பரஸ் முதலிய எல்லா சத்துக்களும் உள்ளன.

Tap to resize

Latest Videos

1.. பந்தல் காய்கறிகளில் சுரையும் ஒன்று. முன்பு நாட்டு விதை மூலம் சாகுபடி செய்யும் காலத்தில் ஒரு பட்டத்தில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆடிமாதம் விதைப்பு செய்தால் தை மாதம் முதல் சித்திரை மாதம் வரை மகசூல் கிடைக்கும்.

2. தற்போது வீரிய ஒட்டு ரகங்கள் நடைமுறைக்கு வந்த பின்பு வருடம் முழுவதும் பயிரிடப்படுகிறது. சுரைக்காயில் உருண்டை மற்றும் நீலம் என இரண்டு வகைகள் உள்ளன.

3. பந்தல், வீடுகளின் மேற்கூறைகள் மற்றும் மரங்கள் மீது கொடிகள் ஏற்றி விடப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகிறது. தோட்டங்களில் பந்தல் அமைத்தோ, தரையிலோ அல்லது மரக்கிளைகள் நட்டோ வளர்க்கப்படுகிறது.

4. சுரைக்காயின் மகசூல் காலமானது பூக்கள் தோன்றியதிலிருந்து மூன்று மாதம் ஆகும்.

5. ஆறு அடி இடைவெளியில் சிறிய வாய்க்கால் அமைத்து கொள்ளுங்கள். அதில் மூன்று முதல் நான்கு அடி இடைவெளியில் ஒரு குழிக்கு மூன்று முதல் நான்கு விதை ஊன்ற வேண்டும். செடிகள் முளைத்து வந்தபிறகு இரண்டு செடிகளை விட்டுவிட்டு மற்றவைகளை களைத்து(பிடுங்கி விடுங்கள்) விடவேண்டும்.

6. விதை நடுவதற்க்கு முன்பு தொழுவுரம் கண்டிப்பாக குழியில் இடவேண்டும். மண்புழு உரத்துடன் கலந்து இடுவது இன்னும் சிறப்பு. சுரைக்காய்க்கு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். சில மண் வகைகளுக்கு ஏற்றவாறு தேவையானா அளவு தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

7.  விதை நட்ட நாற்பதாவது நாட்கள் முதல் சுரை பூக்கள் பூக்க தொடங்கும்.

8. உரமாக மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் தொடர்ந்து அளிப்பதன் மூலமும், மாதம் ஒரு முறை உயிர் உரங்களை இடுவதாலும் திடமான கொடி மற்றும் அதிக பூக்கள் உருவாகும். மேலும் திரட்சியான காய்கள் கிடைப்பதற்கு வழிவகுக்கும்.

 9. வாரம் ஒரு முறை மண்புழு உரத்தை இட்டால் காய்கள் சுவை அதிகமாகவும், எடை அதிகமான காய்கள்களும் கிடைக்கும். மண்புழு உரத்துடன் மீன் அமிலம் கலந்து இட்டால் செடியில் அடர் பச்சை நிற இலைகள் தோன்றும்.

10. பொதுவாக சுரைக்கு பூச்சி தாக்குதல் குறைவு. வாரம் ஒரு முறை கற்பூரகரைசல் தெளித்தால் சுரைக்காயை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் புழுக்களை முற்றிலும் கட்டுப்படுத்தலாம்.

11. மண்ணில் சத்து குறைந்தால் பூக்கள் உதிர தொடங்கி விடும். தேங்காய் பால் மோர் கரைசல் மற்றும் மீன் அமிலம் கலந்து தெளித்து பூக்கள் உதிர்வதை தடுக்கலாம்.

12.. ரசாயன முறை சாகுபடி விட இயற்கை முறை சாகுபடி முறையில் மகசூல் அதிகரிக்கும். செடிகளின் ஆயுட்காலமும் அதிகமாக இருக்கும். இதனால் அதிகப்படியான மகசூல் கிடைக்கும். 

click me!