அறுபது டன்கள் வரை மகசூல் கொடுக்கும் கோ 2001-13 கரும்பு ரகம்…

 |  First Published Aug 3, 2017, 12:49 PM IST
There are so many advantages to growing goats ......



கோ 2001-13 கரும்பு ரகம் மிட்லேட் விதத்தைச் சேர்ந்தது. இந்த ரகம் விரைவாக வளர்கிறது விரைவான வளர்ச்சியை கொண்டது. நன்கு வளர்ந்த கரும்பு இருபது அடி உயரம் வரை இருக்கும். இதனால் அதிக மகசூல் கிடைக்கும்.

இந்த ரக கரும்பிற்கு தண்ணீர் அதிகம் தேவை படாது. குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் கிடைக்கும் ரகம்.  உரங்கள் அதிகம் தேவைப்படாத ரகங்களில் இதுவும் ஒன்று. இதனால் சாகுபடி செலவுகள் குறைவு.

Tap to resize

Latest Videos

நுன்னூட்ட உரங்களும், நுன்னுயிர் உரங்களே இந்த ரகத்திற்கு போதுமானதாகும். குறைந்த செலவில் அதிக மகசூல் தரும் இந்த கரும்பு ரகம்.

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலும் - மீன் அமிலமும் சம அளவில், ஒரு லிட்டர் வருமாறு கலந்து கொள்ளவேண்டும். இந்த கலவையை 150 லிட்டர் தண்ணீர் உடன் கலந்து கரும்பு வயலுக்கு பாய்ச்சினால், மூன்றாவது நாள் சோகைகள் ( இலைகள் ) கரும் பச்சை நிறத்திற்கு மாறிவிடும்.

அதிகமான பக்க கிளைப்புகள் தோன்றுவதற்கு இந்த கரைசல் கரும்பிற்கு உறுதுணை புரிகிறது.

இந்த ரகத்திற்கு தழைச்சத்து அதிகம் தேவைப்படுவதில்லை. மணிச்சத்து அதிகம் கொடுப்பதால் பருமனான கரும்புகள் கிடைக்கும். வறட்சியைத் நன்கு தாங்கி வளரக்கூடிய கரும்பு ரகம் இது. கரும்புகள் பார்ப்பதற்கு ஓரளவு சன்னமாக இருந்தாலும் அதிக எடையுடன் இருக்கும்.

அளவுக்கு அதிகமான பக்க கிளைப்புகள் (Gap filling) இந்த ரகத்திற்கு தேவையில்லை. குறைந்த பட்சம் மூன்று அடி இடை வெளி பாருக்கு பார் இருக்க வேண்டும்.

இயற்கை முறையில் இந்த ரக கரும்பு சாகுபடி செய்யும்பொழுது ஏக்கருக்கு ஐம்பது முதல் அறுபது டன்கள் வரை மகசூல் எடுக்கலாம்.

click me!