இயற்கை முறையில் ரோஜா  சாகுபடி செய்து நல்ல லாபம் பார்க்கலாம்...

First Published Apr 23, 2018, 1:10 PM IST
Highlights
Rose is a natural way to get a good profit ...


ரோஜா  சாகுபடி 

ரகங்கள் : 

எட்வர்ட் ரோஜா மற்றும் ஆந்திர சிகப்பு ரோஜா இவைகள் வணிக ரீதியாக பயிர் செய்வதற்கு மிகவும் ஏற்ற இரகங்கள். 

இதைத் தவிர இன இரகங்கள் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு நிறங்களில் பூக்கும் இரகங்களையும் பயிர் செய்யலாம்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை: 
நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது குறுமண் நிலம் ஏற்றது. தமிழ்நாட்டில் சமவெளிப் பகுதியில் பயிரிடலாம்.

விதையும் விதைநேர்த்தியும்

இனப்பெருக்கம் : வேர்பிடித்த வெட்டு துண்டுகள் மற்றும் ஒட்டும் கட்டிய செடிகள்.

நிலம் தயாரித்தல்

பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் முன்னரே, 45 செ.மீ நீள, அகல, ஆழம் உள்ள குழிகளை 2.0 x 1.0 மீட்டர் இடைவெளியில் எடுத்து ஆறவிடவேண்டும். நடுவதற்கு முன்னர் குழி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரம், 1.3 சதம் லிண்டேன் மருந்து 20 கிராம் மற்றும் மேல்மண் இடவேண்டும். 

லிண்டேன் மற்றும் இடுவதால் கரையான் மற்றும் எறும்புகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். பிறகு வேர்பிடித்த வெட்டுத் துண்டுகளைக் குழிகளின் மத்தியில் மழைக்காலங்களில் நடவேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்ட செடிகளுக்கு உடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். செடிகள் வேர்ப்பிடித்து துளிர்விடும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், பின்பு மண் மற்றும் கால நிலைகளுக்குத் தகுந்தவாறு வாரத்திற்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும். ரோஜா செடிகளுக்கு உப்புநீர் பாய்ச்சினால் செடிகள் நாளடையில் காய்ந்துவிடும். எனவே உப்புநீர் பாய்ச்சுவதைத் தவிர்க்கவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

கவாத்து செய்தல் : 

அக்டோகர் மாதங்களில் கவாத்துசெய்யவேண்டும். முந்திய ஆண்டில் 50 சதம் வளர்ந்த தண்டுகளை வெட்டிவிடவேண்டும். மேலும் காய்ந்த, நோயுற்ற பூச்சி தாக்கப்பட்ட கிளைகள் மற்றும் குறுக்காக வளர்ந்த கிளைகளையும் வெட்டி அப்புறப்படுத்தவேண்டும். 

வெட்டிய தண்டுப் பகுதிகளைப் பாதுகாக்க போர்டோபசை அல்லது பைட்டலான் பகையுடன் கார்பரில் 50 சதம் நனையும் தூள் கலந்து தடவிவிடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

கவாத்து செய்தவுடன் செடியைச் சுற்றி 2 அடி தள்ளி செடி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரத்துடன் 6:12:12 கிராம் என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்த கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

சிவப்பு செதில் பூச்சிகள் : 

இப்பூச்சிகள் செடிகளில் சாற்றை உறிஞ்சுவதால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய கிளைகளை அகற்றி எரித்துவிடவேண்டும். செதில் பூச்சி கூட்டமாகக் காணப்படும் தண்டுப் பகுதியை டீசல் அல்லது மண்ணெண்ணெயில் முக்கிய பஞ்சினால் துடைத்துவிடவேண்டும்.

சாம்பல் நோய்: 

இந்நோய் இலைகளில் அடிப்பாகம், இலைக்காம்பு மற்றும் பூங்கொத்துகளில் வெள்ளைநிறப்படலம் போன்று காணப்படும். இந்நோய் தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும். பூ மொட்டுகள் வளராமல் நின்றுவிடும். ஒரு கிராம் மருந்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

click me!