வசம்பு கொண்டு தயாரிக்கப்படும் பூச்சி விரட்டி எப்படியெல்லாம் பயன்படுகிறது தெரியுமா?

 |  First Published Apr 21, 2018, 12:43 PM IST
Do you know how much of the pest is made with the scent?



வசம்பு பூச்சி விரட்டி

வசம்பு என்னும் அற்புத மூலிகையை பயன்படுத்தி மூலிகை பூச்சிவிரட்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளது புவிகேர் நிறுவனம். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் ஒப்புதலோடு இந்த மூலிகை பூச்சி விரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

நெல்லைத் தாக்கும் இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், அந்துபூச்சி, கதிர் நாவாய்பூச்சி, தத்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த நட்டபின் 25ம் நாள், 45ம் நாள் மற்றும் பொதிப்பருவத்தில் 10 கிலோ அளவில் தூவினால் போதும்.

காய்கறிகளைத் தாக்கும் பலவிதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 10 கிலோ தூவினால் போதும். பருத்தியில் அசுவினி, காய்ப்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்த 5 நாட்களுக்கு ஒரு முறை 10 கிலோ தூவினால் போதும். 

வீட்டுத்தோட்டங்கள், சிறிய செடிகள், பூந்தொட்டிகளுக்கு ஒரு கைபிடி (75-100 கிராம்) இலைப்பகுதி மற்றும் தண்டுப்பகுதிகளில் தூவலாம். பெரிய கொடிகள், மரங்களுக்கு 250 கிராம் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

மேலும், வீட்டு கழிப்பறை, குளியலறை, சமையல் அறைகளில் பூச்சியைக் கட்டுப்படுத்த இரவு 250 கிராம் தூவிவிட்டு காலையில் கழுவிவிட்டால் போதும்.

click me!