பாசன நீர் ஆய்வு:
நீர் இறைக்கும் மோட்டார் கருவியை 20 நிமிடம் ஓட்டவும். பின்பு ஒரு சுத்தமான கண்ணாடி அல்லது பாலிதீன் பாட்டிலை எடுத்துக் கொண்டு அதை நீர் மாதிரி எடுக்க வேண்டிய தண்ணீரால் நன்கு கழுவிய பின் அரை லிட்டர் அளவுக்கு பாசன நீர் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு தர வேண்டும்.
undefined
மண்வள அட்டை:
மண் ஆய்வு செய்து அடுத்த பயிர்களுக்கு மண் வள அட்டை மூலம் உரப்பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டை மூன்று ஆண்டுகளுக்கு பொருந்தும்.
மண்வள அட்டையில் அளிக்கப்படும் பரிந்துரைகள்:
களர், அமில மற்றும் உவர்நிலை கண்டறிந்து அதற்கேற்ப சீர்திருத்தங்கள், பரிந்துரைகள், சுண்ணாம்பு நிலை அறிந்து அதற்கேற்ப பரிந்துரை, சமச்சீர் உரமிடுதல் பரிந்துரைகள், இயற்கை உரப்பரிந்துரைகள்,
நுண்ணுயிர் மற்றும் நுண்ணூட்டச் சத்து பரிந்துரைகள், ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தின் மூலம் நீடித்த நிலையான வேளாண்மைக்கு வழிகாட்டல், பயிர் சுழற்சியில் இடம் பெறும் பயிர்களுக்கு உரப்பரிந்துரை.