மண் மாதிரி எடுக்கும் முறை:
மண் மாதிரி எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல் முதலியவற்றை மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். சாகுபடி செய்யும் பயிரைப் பொறுத்து மேற்கூறிய ஆழத்துக்கு நிலத்தில் “வி’ வடிவத்தில் (மண்வெட்டியால்) குழிவெட்டி அந்த மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.
undefined
வெட்டிய “வி’ வடிவ குழியின் ஓரமாக குழியின் மேலிருந்து கீழாக இரண்டு புறமும், ஓரே சீராக மண்வெட்டியால் ஒரு அங்குல கணத்துக்கு மண்ணை வெட்டி எடுத்து சுத்தமான வாளியில் போட வேண்டும்.
ஒரு வயலில் இதே போன்று குறைந்தது 10 அல்லது 15 இடங்களில் மண்ணை சேகரித்து ஒன்றாகக் கலந்து அதில் இருந்து அரை கிலோ மண்ணைப் பகுத்தல் முறையில் எடுத்து துணிப்பையில் இட்டு பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
மண் மாதிரியுடன் அனுப்ப வேண்டிய விவரங்கள்: பெயர், முகவரி, நிலத்தின் பெயர், சர்வே எண், உர சிபாரிசு தேவைப்படும் பயிர் ரகம், மானாவரி, இறவை.
நுண்ணூட்டச்சத்து ஆய்வுக்கு மண் மாதிரிகள் சேகரிக்கும் முறை: நுண்ணூட்டச்சத்து ஆய்வு செய்ய மண்மாதிரி சேகரிக்கும் போது இரும்பாலான மண்வெட்டி, தட்டு போன்ற பொருள்களை தவிர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக், அல்லது வேறு உலோகங்களால் ஆன பொருள்களைக் கொண்டு மேலே குறிப்பிட்ட முறைகளையே பின்பற்றி மண் மாதிரிகளை சேகரித்து பாலித்தீன் பைகளில் நிரப்பி ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்.