1. சூடான இரும்புகொண்டு நீக்குதல்
பெரும் பாலும் பின்பற்றப்படும் முறையானது கொம்புக்குருத்தைச் சுற்றிலும் அமிலத்தைத் தடவி சூடான இரும்புக் கம்பிகொண்டு தேய்த்தல் ஆகும்.
இது ஒரு சில நிமிடங்களே செய்யப்பட்டாலும் அதிகமாக இருக்கும். மேலும் தலையில் அதிகமான சூடு படுவதால் அது குறையும் வரை கால்நடை வலியைத் தாங்க முடியாமல் அவதிப்பட வேண்டும்.
காய்ச்சிய இரும்பில் தேய்க்கும்போது மிகவும் அதிகமாக அழுத்துதல் கூடாது. அதுவும் ஆடுகளில் மண்டையானது சிறியதாகவும் ஓடுகள் மெல்லியதாக இருப்பதால் எளிதில் காயம் பட்டுவிட வாய்ப்புண்டு.
2.. இரசாயன அமிலங்களைப் பயன்படுத்துதல் கூடாது
கடைகளில் பல இரசாயன அமிலங்கள் கொம்பு நீக்கத்திற்காக விற்பனை செய்யப்படுகின்றன இவற்றை வாங்கிப் பயன்படுபடுத்தும் போது அவை குருத்து மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை எரித்து நிறைய பண்புகளை ஏற்படுத்துகிறது.
இதை பயன்படுத்தும்போது பசுவின் மடியிலோ, மற்ற கன்றின் முகத்திலோ பட்டு எரிச்சலை முற்படுத்துகிறது. எனவே இரசாயன அமிலங்களைக் கொம்பு நீக்கத்திற்கும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.
3.. உலோகத் தோண்டி கொண்டு நீக்குதல்
உலோகம் மூலம் கொம்புக் குருத்தோடு தோண்டி எடுத்தல் மற்றொரு முறையாகும். கொம்பு நீக்கும் தோண்டியானது இதற்காகவே தனியாகச் செய்யப்பட்ட உலோகம் இது கொம்புடன் அதன் அடிப்பாகத்தையும் சேர்த்துத் தோண்டி விடுகிறது. எனவே இந்த முறையில் இரத்தப்போக்கு சேதாரம் மற்றும் வலி அதிகமாக இருக்கும்.
4.. தகுந்த முறை
அனைத்திலும் சிறந்த முறை ஒரு கால்நடை மருத்துவர் உதவியுடன் மின்சார இயந்திரம் மூலம் நீக்குவதே ஆகும். இம்முறையில் இரத்தக்கசிவு, வலி போன்றவை அதிகம் இருக்கின்றது. கட்டணம் சிறிது அதிகமாணாலும் கால்நடைகளுக்கு எந்த சேதாரமும் இருக்காது
இவ்வாறு மருத்துவர் உதவியுடன் அடையாளம் குறியிடுதல் ஆண்குறி நீக்குதல் மற்றும் கொம்பு, அதிக காம்புகளை நீக்கம் செய்வதே சுகாதாரமான முறையாகும். கொம்பு வளர்ந்த பின்பு நீக்குவதை விட வளரும் முன்பு குருத்திலேயே நீக்குவதே சிறந்தது.
ஏனெனில் வளர்ந்த கொம்பை நீக்கவதில்தான் வலியும் இரத்தப்போக்கும் அதிகமாவதுடன் கடினமாகவும் இருக்கும். எப்போதும் கொம்பை நீக்கிய பின்பு ஏதேனும் தொற்று நீக்கிகள் தடவவேண்டும். எ.கா: டெட்டால், வேப்பெண்ணெய்