மாடுகளுக்கு கொம்பு நீக்கம் எப்போது செய்யணும்? ஏன் செய்யணும்? 

 |  First Published Jan 30, 2018, 1:33 PM IST
When do horns get rid of cows? Why do you do



கொம்பு நீக்கம்

** கொம்பு நீக்கமானது கன்று மற்றும் குட்டிகளுக்கு இளம் வயதிலேயே செய்யப்படுதல் பராமரிப்புக்கு எளிதாகும்.

** இயற்கையாகவே கொம்பில்லாத கால்நடை தவிர மற்ற அனைத்திற்கும் கொம்பு நீக்கம் செய்ய வேண்டும். 

** இல்லையெனில் அவை மேய்ச்சலின்போது மற்றும் தீவனம் அளிக்கும்போது ஒன்றையொன்று தாக்கி காயப்படுத்திக் கொள்ளும். மேலும் அதை கையாள்பவரையும் காயப்படுத்திவிடும்.

** வண்டியிழுக்கத் தேவையான கொம்பு உள்ள மாடுகளைத் தனித்தனியே கட்டி வைத்தல் நலம்

** வெள்ளாடுகளுக்கும் கொம்பு நீக்கிம் செய்தல் வேண்டும். இல்லையெனில் மேயும்போது எங்கேனும் கொடிகளிலோ, வேலியிலோ சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது

** கொம்புக் குருத்து நீக்கம் பிறந்த சில நாட்களிலேயே செய்யப்பட வேண்டும்

** அல்லது கொம்பு மிகச் சிறிதாக இருக்கும்போதே செய்தல் வேண்டும். கடினமான கொம்புகளை நீக்கும்போது வலியும் அதிகமாக இருக்கும்

** கொம்பு நீக்கிய பின்பும் சிறிது நாட்கள் அந்த இடத்தைக் கவனித்து வரவேண்டும். எங்கேனும் மீண்டும் கொம்பு நீக்கம் செய்ய வேண்டும்

** ஆடுகளில் கொம்பானது மாடுகளை விட விரைவாக வளரும். எனவே ஆட்டுக்குட்டிகளை அடிக்கடி கவனித்து வருதல் வேண்டும்.

Tap to resize

Latest Videos

click me!