வெள்ளாடுகளில் இனப் பெருக்கம்
** வெள்ளாடுகளில், பிட்டியூட்டரி என்னும் நாளமில்லாச் சுரப்பி, வெள்ளாடுகள் குட்டி போடுவதை முறைப்படுத்துகின்றது. பிறந்த குட்டிகள் நன்கு உயிர்வாழ ஏற்றக் கால நிலை இருக்க வேண்டும்.
** நமது இந்திய நாட்டின் சமுனாபாரியுத் பீட்டல் இன வெள்ளாடுகளும் சூலை முதல் செப்டம்பர் வரை சினைப் பருவத்திற்கு வரும்.
** பார்பாரி, வங்காளக் கறுப்பு, நம் தமிழகப் பகுதி சாட்டு ஆடுகள் ஆகியவை ஆண்டு முழுவதும் சினைக்கு வரும். எனினும், வறட்சியில்லாமல், மழை பெய்து புல் பூண்டு வளர்ந்துள்ள சூழ்நிலையிலேயே வெள்ளாடுகள் சினைக்கு வந்து நன்கு கருத்தரிக்கின்றன.
இனப் பெருக்கம் செய்யத் தகுந்த வயது
** வெள்ளாடுகள் மிகக் குறைந்த வயதிலேயே இனப் பெருக்கம் செய்யும் பருவத்தை அடைந்து விடுகின்றன. ஏழு மாத வயதில் குட்டி ஈன்ற பெட்டை ஆடும் உண்டு. ஆனால் இதி பெட்டை ஆட்டையும், குட்டியையும் மிகப் பாதிக்கும்.
** நம் நாட்டு ஆடுகள் 8 முதல் 10 மாத வயதில் இனப்பெருக்கும் செய்யலாம். வெளி நாட்டினம் என்றால் 15 முதல் 18 மாத வயதில் இனவருத்தி செய்யலாம். இளமையில் வருவத்திற்கு வந்து விடுவதால், ஆண், பெண் குட்டிகளைப் பிரித்து வளர்ப்பது சிறந்தது.
பொலிவு செய்ய ஏற்ற நேரம்
** முதல் சினை அறிகுறு தோன்றிய 10 முதல் 15 மணி நேரத்திற்குள் பொலிவு செய்வது சிறந்தது. பொதுவாக, ஒரு முறை பொலிவு செய்வது போதுமானது. நமது நாட்டில் சில பகுதிகளில், வெள்ளாட்டுக் கடா விந்து உடைற நிலையில் பாதுகாக்கப்பட்டுச் செயற்கை முறையிலும் கருவூட்டல் செய்யப் பயன்படுத்தப்படுகின்றது.