கொழுக்கட்டை புல் சாகுபடி செய்து கால்நடைகளுக்கான தீவனப் பற்றாக்குறையை போக்கலாம்…

 
Published : May 15, 2017, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
கொழுக்கட்டை புல் சாகுபடி செய்து கால்நடைகளுக்கான தீவனப் பற்றாக்குறையை போக்கலாம்…

சுருக்கம்

Poultry grass cultivation can lead to a shortage of fodder for livestock ...

நிலம் தயாரித்தல்

மண் வடிகால் வசதியுள்ள இரு மண்பாட்டு மற்றும் சுண்ணாம்புச் சத்து மிகுந்த நிலம் மிகவும் ஏற்றது. களர், உவர், நிலங்களிலும் பயிர் செய்யலாம்.

உழவு

நிலத்தை இரும்புக்கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை உழுது பாத்திகள் அமைக்க வேண்டும்.

தொழு உரமிடுதல்

எக்டருக்கு 5 டன் தொழு உரம் இடவும்.

உரமிடுதல்

மண் பரிசோதனையின் படி உரமிடவும், மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25 :40 :20 கிலோ தழை, மணி , சாம்பல் சத்து       இடவும்.

அடியுரம்

விதைப்புக்கு முன் முழு அளவு உரத்தையும் அடியுரமாக இடவும்.

மேலுரம்

ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் எக்டருக்கு 25 கி தழைச்சத்தை மழை வரும் போது இடவும்.

விதைப்பு

விதை அளவு: எக்டருக்கு 6-8 கிலோ (அல்லது) எக்டருக்கு 40,000 வேர்க்கரணைகள்

இடைவெளி : 50  X  30 செ.மீ. புதிய விதைகளுக்கு 6-8 மாதம் விதையுறக்கம் உண்டு. விதையுறக்கத்தை தவிர்க்க, விதைப்புக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு விதைகளை 1 சதம் பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில் ஊறவைக்கவும்.

களை நிர்வாகம்

தேவைப்படும் போது களை எடுக்கவும்.

அறுவடை

முதல் அறுவடை விதைத்து 70 அல்லது 75 நாட்களிலும், அடுத்தடுத்த 4-6 அறுவடைகள் வளர்ச்சியைப் பொறுத்து செய்ய வேண்டும்.

அறுவடைக்கு பதிலாக கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடலாம்.

ஊடுபயிர்

வறட்சியை தாங்கி வளரக் கூடியது.

கொழுக்கட்டைப் புல்லை முயல் மசாலுடன் 3:1 என்ற விகிதத்தில் ஊடுபயிராக பயிரிடலாம்.

பசுந்தீவன மகசூல்

ஆண்டிற்கு 4 முதல் 6 அறுவடைகளில் எக்டருக்கு 40 டன் பசுந்தீவன மகசூலைத் தரவல்லது.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?