செந்துருக்கம்பு சாகுபடி முதல் அறுவடை வரை ஒரு அலசல்…

Asianet News Tamil  
Published : May 15, 2017, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
செந்துருக்கம்பு சாகுபடி முதல் அறுவடை வரை ஒரு அலசல்…

சுருக்கம்

Planting of beetroot to the first harvest is a ...

செந்துருக்கம்பு அல்லது குசும்பா சாகுபடி

இரகங்கள்:

கே 1 மற்றும் கே 2

பயிர் மேலாண்மை

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பையால் உழவண்டும்.

பின்பு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும்

தொழு உரமிடுதல்

நிலம் தயாரித்த பிறகு 12.5 டன் தொழுஉரம் (அ) மக்கிய தென்னை கழிவு இடவேண்டும்.

தொழு உரமானது உழுவதற்கு முன்னால் இடப்படவில்லையெனில், கடைசி உழவுக்கு முன்பு தொழு உரத்தை இட்டு மூடவேண்டும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் மருந்தைக் கலந்து 24 மணிநேரம் கழித்து விதைக்க வேண்டும். இவ்வாறு விதைநேர்த்தி செய்வது வேர்அழுகல் நோயிலிருந்து பயிரினைப் பாதுகாக்கும்

விதைக்கும் முறை

விதைகளை 2 முதல் 3 செ.மீ. ஆழத்தில் வரிசையாக நடவு செய்ய வேண்டும்.

விதைகளை கொரு அல்லது நாட்டுக் கலப்பை ரமூலமாக வரிசையில் நடவு செய்யலாம்

இடைவெளி

நடவு செய்யும் போது வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியானது 45 செ.மீ. ஆகவும், வரிசையில் உள்ள செடிகளுக்கு இடையே உள்ள இடைவெளியானது 15 செ.மீ. இருக்குமாறும் விதைக்க வேண்டும்

விதைத்த 15-ம் நாள், செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளிவிட்டு செடிகளை கலைத்து விட வேண்டும்

உரமிடுதல்

பயிருக்குத் தேவையான தழைச்சத்தான 20 கி / ஹெ அடியுரமாக இடவேண்டும்

களை கட்டுப்பாடு

விதைத்த 25 நாள் மற்றும் 40 நாள் ஆகிய இருமுறை ககைளை, களைக்தொத்தி மூலமாகவோ அல்லது கைக் களையாகவோ எடுக்க வேண்டும்

அறுவடை

முதிர்ந்த இலைகள் மற்றும் முழுச் செடியும், பழுப்பு நிறமாக மாறுவது முதிர்ச்சியைக் குறிக்கும். அறுவடை செய்யப்பட்ட பயிரினை களத்தில் வைத்து, கொண்டைகளைப் பறித்து உலர்த்திய பின்பு விதைகளைத் தனியே பிரித்தெடுத்து வெயிலில் உலர்த்தி சுத்தம் செய்ய வேண்டும்.

அறுவடைக்குப்பின் விதைகளை நன்கு உலர்த்திய பின்பே கோணிகளில் சேமிக்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!