தீவனத்திற்காக மக்காச்சோளத்தை இப்படியும் சாகுபடி செய்யலாம்…

 |  First Published May 15, 2017, 12:22 PM IST
Soak the maize for the feed



இரகங்கள்:

ஆப்பிரிக்கன் நெட்டை, கங்கா 5

Latest Videos

undefined

பருவம்:

இறவைப் பயிராக வருடம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்:

இரும்புக் கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக் கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழலாம்.

தொழு உரமிடுதல்

எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரம் வயலில் இட்டு உழவேண்டும். 2 முதல் 3 முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 60 செ.மீ இடைவெளியில் பார் அமைக்க வேண்டும்.

பார் பிடித்தல்

பாசன நீரின் அளவைப் பொறுத்தும் நிலத்தின் சரிவைப் பொறுத்தும் 10 அல்லது 20 சதுர மீட்டருக்கு பாத்திகள் அமைக்கவும்.

உரமிடுதல்

எக்டருக்கு அடியுரமாக 30: 40 : 20 கிலோ தழை, மணி , சாம்பல் சத்து இடவும். விதைத்து 30 வது நாளில் மேலுரம் எக்டருக்கு 25 கிலோ தழைச் சத்து இடவும்.

விதைப்பு

இடைவெளி: 30 X 15 செ.மீ

விதை அளவு: எக்டருக்கு 40 கிலோ. விதைப்புக்கு முன் மூன்று பாக்கெட்டுகள் அசோஸ்பைரில்லம் (எக்டருக்கு 600 கிராம்) உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்சவும், மூன்றாவது நாளில் உயிர் நீர்க் கட்டவும்.

களை நிர்வாகம்

களைகள் இருக்கும் போது களை எடுக்கவும்

அறுவடை

பூக்கள் பூத்த 40 நாட்களில், விதைகள் வினையியல் முதிர்ச்சி அடைகின்றன. எனவே முதிர்ந்த கதிர்களை 45 நாட்களுக்குள் அறுவடை செய்தல் வேண்டும்.

click me!