செடி முருங்கை சாகுபடி
மண் மற்றும் தட்பவெப்பநிலை :
செடி முருங்கை எல்லா வகை மண்ணிலும் வளரும். இருப்பினும் மணல் கலந்த செம்மண் பூமி அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது, மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.
பருவம் :
ஜீன் – ஜீலை, நவம்பர் – டிசம்பர்
விதையளவு :
எக்டருக்கு 500 கிராம் விதைகள்
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது சமன் செய்த பின்பு 2.5 மீ x 2.5 மீ இடைவெளியில் 45 x 45 x 45 செ.மீ நீளம். அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்கவேண்டும். தோண்டிய குழிகளை ஒரு வாரம் ஆறப்போட்டு விட்டு, பிறகு குழி ஒன்றிற்கு நன்கு மக்கிய தொழு உரம் 15 கிலோ வாரம் ஆறப்போட்டு விட்டு, பிறகு குழி ஒன்றிற்கு நன்கு மக்கிய தொழு உரம் 15 கிலோ மற்றும் மேல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து குழிகளை நிரப்பவேண்டும்.
குழிகளைச் சுற்றி சுமார் 60 செ.மீ அகலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கேற்ற வாய்க்கால்கள் அமைக்கவேண்டும்.
விதையும் விதைப்பும்
மூடப்பட்ட குழிகளின் மத்தியில் சுமார் 3 செ.மீ ஆழத்தில் விதைகளை விதைக்கவேண்டும். ஒரு குழியில் ஒன்று அல்லது இரண்டு விதைகளை விதைக்கவேண்டும்.
விதைத்த ஏழு முதல் பத்து நாட்களுக்குள் விதைகள் முளைக்கும். விதைகளை பாலித்தீன் பைகளில் விதைத்து 30 நாட்கள் வயதுடைய செடிகளை நடுவதற்கு பயன்படுத்தலாம்.
விதைகள் முளைக்காத குழிகளில் பாலித்தீன் பைகளில் வளர்ந்த செடிகளை நட்டு செடி எண்ணிக்கையைப் பராமரிக்கலாம்.
நீர் நிர்வாகம்
விதைப்பதற்கு முன் மூடிய குழிகளில் நீர் ஊற்றவேண்டும். விதைத்த மூன்றாம் நாள் மீண்டும் நீர்ப் பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
முருங்கையில் நல்ல விளைச்சல் பெற செடி ஒன்றுக்கு 45 கிராம் தழைச்சத்து 16 கிராம் மணிச்சத்து, 30 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை விதைத்த மூன்றாவது மாதத்தில் இட்டு நீர் பாய்ச்சவேண்டும்.
மேலும் ஆறாவது மாதத்தில் தழைச்சத்து மட்டும் ஒரு செடிக்கு 45 கிராம் என்ற அளவில் இடவேண்டும்.