நடவு செய்த பயிர்களை இப்படியெல்லாம் பாதுகாக்கலாம்... 

First Published Jun 27, 2018, 2:38 PM IST
Highlights
Planting crops can be preserved like this ...


நடவு செய்த பயிர்களை பாதுகாக்க...

** புழுக்களை தின்னும் பறவைகள் நிற்பதற்காக ஒரு ஏக்டருக்கு, 10 பறவை நிற்கும் குச்சிகளை வைக்க வேண்டும்.

** தத்து பூச்சி, அசுவனி மற்றும் வெள்ளை ஈ போன்றவற்றை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 2-3 டெல்டா மற்றும் மஞ்சள் ஒட்டும் பொறியை வைக்க வேண்டும்.

** உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிராக, இரண்டிலிருந்து மூன்று 5% வேப்பங்கொட்டை கரைசலை தெளிக்க வேண்டும்.

** வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பதன் மூலம், துளைப்பான் பாதிப்பையும் குறைக்க முடியும். வேப்ப எண்ணெய் (2%) கரைசல் அளிப்பதன் மூலம் துளைப்பான் பாதிப்பை குறைக்கலாம். 

** இலை தத்து பூச்சி மற்றும் ஏனைய உறிஞ்சும் பூச்சின் எண்ணிக்கை பொருளாதார சேதத்தை உண்டாக்கும். அளவுக்கு மேல் இருப்பின், ஒரு ஹெக்டருக்கு 150 மில்லி, இமிடாகோலோபிரிட் 17.8 SL தெளிக்க வேண்டும்.

** தண்டு மற்றும் காய் துளைப்பான் (Leucinodes orbonalis) மொத்தமாக பிடிப்பதற்கு ஒரு எக்டருக்கு 5 என்ற வீதத்தில் இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும். 15-20 நாள் இடைவெயியில் கவரும் பொருளை (லூர்) மாற்ற வேண்டும்.

** தண்டு மற்றும் காய் துளைப்பானை கட்டுப்படுத்த, வார இடைவெளியில், 4-5 முறை முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா பிரசிலியன்சிலை 1-1.5 இலட்சம்/ஹெக்ட்ர் என்ற அளவில் வெளியிட வேண்டும்.

** நூற்புழு மற்றும் துளைப்பான் சேதத்தை கட்டுப்படுத்த, செடிகளின் வரிசையில், ஒரு ஹெக்டருக்கு 250 கிலோ வேப்பம்புண்ணாக்கை (இரண்டு தடவையாக- நட்ட 25 மற்றும் 60 நாட்கள் கழித்து) மண்ணில் இட வேண்டும். 

** காற்று வேகமாக அடிக்கும் போதோ அல்லது வெப்பம் 300 செல்சியசிற்கு மேல் இருக்கும் போது, வேப்பம் புண்ணாக்கு அளிக்க கூடாது.

** துளைப்பானால் பாதிக்கப்பட்ட தண்டுகளை மற்றும் காய்களை சேகரித்து, அழிப்பதன் மூலமும் துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

** துளைப்பானின் பாதிப்பு பொருளாதார சேத நிலையை (5% பாதிப்பு) கடக்கும் நிலையில் பின்வருவனவற்றை அடிக்கலாம். சைபர் மெத்திரின் 25 EC - 200 கிராம் a.i/ எக்டர் (0.0005%) கார்பரில் 50 WP - 3 கிராம்/ஒரு லிட்டர் நீரில்

** திரும்ப திரும்ப கத்திரி பயிரிடுவதலாலும், துளைப்பான் பாதிப்பு அதிகம் இருக்கலாம். எனவே கத்திரி குடும்பத்தில் சேராத பயிர்கொண்டு, பயிர் சுழற்சியை மேற்கொள்ளலாம்.

** ஹட்டா வண்டின் முட்டைகள், புழுக்கள் மற்றும் வண்டுகளை அவ்வப்போது முறையாக சேகரித்து அழிக்க வேண்டும்.

** சரியான இடைவெளியில் சிற்றிலை நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை நீக்க வேண்டும்.

** பாக்டிரியா வாடல் நோயைக் கட்டுப்படுத்த முறையாக பசுந்தாள் உரம், பாலீதீனால் முடாக்கு மற்றும் பிளிசிங் பவுடர் மண்ணில் இடலாம்.

click me!