நிலக்கடலையைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் அறுவடை நுட்பங்கள் ஒரு பார்வை...

 |  First Published Dec 15, 2017, 12:17 PM IST
Pests and Harvest techniques that attack groundnut



நிலக்கடலையைத் தாக்கும் பூச்சிகள்

பொதுவாக நிலக்கடலையை தாக்கும் பூச்சிகளை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

• சாறு உறிஞ்சும் பூச்சிகள்

• இலையை கடித்து உண்ணும் பூச்சிகள்

• காய்களை துளைத்தும், வேர்களை கடித்து சேதம் விளைவிக்கும் பூச்சிகள்.

இந்த மூன்று வகை பூச்சிகளும் எப்படி பயிருக்கு சேதம் விளைவிக்கின்றன, அவற்றை எவ்வாறு கட்டப்படுத்த வேண்டும் என்பதை இப்பொழுது பார்ப்போம்.

1.. இலைப்பேன்

இலைப்பேன் தாக்கிய செடியில் இலையின் மேல் பகுதியில் வெண்படலம் போன்று காணப்படும். கீழ்ப்பாகம் பழுப்பு நிறமாக மாறியிருக்கும்.

• இலைகள் கிண்ண வடிவில் மேல நோக்கி குவிந்து இருக்கும்.

• இலைகளின் ஓரங்கள் காய்ந்து காணப்படும்.

• இலைகள் சுருங்கி வளர்ச்சியின்றி இருக்கும்.

2.. பச்சைத் தத்துப் பூச்சி

இந்த தத்துப்பூச்சி தாக்கப்பட்ட பயிர்களில் கீழ்கண்ட அறிகுறிகள் தென்படும்.

• இலைகளில் கொப்புளங்கள் ஏற்பட்டு பொரிந்தது போல் தெரியும்

• இலைகளின் ஓரங்கள் மஞ்சள் நிற மாற்றம் காணப்படும்.

3.. அசுவினி 

அசுவினி தாக்கப்பட்ட பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி, சுருங்கிக் காணப்படும்.

கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றை அடித்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு மானோ குரோட்டபாஸ் 300 மில்லி அல்லது குளோர்பைரிபாஸ் 300 மில்லி அல்லது டைகுளோராவாஸ் 250 மில்லி அடித்து கட்டுப்படுத்தலாம்.

 அறுவடை நுட்பங்கள்

• நுனி இலை மஞ்சளாக மாறுதல் மற்றும்

• அடி இலைகள் காய்ந்து உதிர்வது பயிர் முதிர்ச்சி அடைந்ததற்கு அறிகுறியாகும்.

• சில செடிகளைப் பிடுங்கி காய்களை உடைத்துப் பார்த்தால் தோலின் உட்பாகம் கரும்பழுப்பு நிறமாக இருக்கும்.

சரியான அறுவடைத் தருணம்

• நிலம் காய்ந்து இருந்தால் நீர்பாய்ச்சியபின் களை கொத்து மூலமாகவோ, கையினாலோ செடிகளை பிடுங்க வேண்டும்.

• செடிகளைப் பிடுங்கி காய்களைப் பறிக்காமல் குவித்து வைக்கக் கூடாது.

• செடிகளைப் பிடுங்கி சேகரித்தவுடன் ஆட்களை கொண்டு காய்களை செடியிலிருந்து பரித்தெடுக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

click me!