நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள வேண்டிய பின்செய் நேர்த்தி முறைகள் மற்றும் நீர் நிர்வாக முறைகள்...

 |  First Published Dec 15, 2017, 12:15 PM IST
Nutrient methods and water management methods to be taken for cultivation of groundnut ...



பின்செய் நேர்த்தி முறைகள்

மண் அணைத்தல்

நிலக்கடலையில் இது ஒரு முக்கிய பின்செய் நேர்த்தி ஆகும். விதைத்த 45ம் நாள் மண் அணைக்க வேண்டும். அதாவது மண்ணை எடுத்து செடியினைச் சுற்றியும் அதன் மேலும் இட்டு அணைத்து விடவேண்டும். மண் அணைப்பதால் விழுதுகள் எளிதில் மண்ணில் இறங்குவதற்கு ஏதுவாகின்றன. செடியில் அதிக எண்ணிக்கையில் காய்கள் பிடிக்கும்.

ஜிப்சம் இடுதல்

நிலக்கடலை உற்பத்தியில் பயிருக்கு ஜிப்சம் இடுவது மிக அவசியம். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச் சத்தும் அடங்கி உள்ளன. சுண்ணாம்புச் சத்து காய்கள் திறட்சியாகவும், அதிக எடை உடையதாகவும் உருவாக வழி செய்கிறது. 

கந்தகச் சத்து நிலக்கடலையில் எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கிறது.ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சத்தை விதைத்த 40-45ம் நாள் இட்டு செடிகளைச் சுற்றி மண் அணைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதை உற்பத்தியில் வயலில் களைகள் அதிகமாக பெருகுவதைத் தடுக்கவும், பூச்சி நோய் கட்டுப்பாட்டிற்கும் செடிகள் நன்கு வேåன்றி காய் உருவாகவும் சிறந்த நீர் நிர்வாகம் மிக முக்கியமாகும். நிலக்கடலை விதை உற்பத்தியில் நீர் பாய்ச்ச வேண்டிய அதிமுக்கிய நிலைகளாவன:

• விதைக்கும் சமயம்

• உயிர்த் தண்ணீர் (விதைத்த 4-5வது நாள்)

• விதைத்த 20-22ம் நாள்

• விழுது இறங்கும் சமயம் மற்றும்

• காய்பிடிப்பு மற்றும் முதிர்சி தருணத்தில் நன்கு நீர்பாய்ச்ச வேண்டும்.

Tap to resize

Latest Videos

click me!