நிலக்கடலை சாகுபடியின்போது மேற்கொள்ள வேண்டிய உரநிர்வாக முறைகள்
பயிர் செழித்து வளர்வதற்கும் பயிர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் தவிர்க்க, வேர் வளர்ச்சிக்கும், பூக்கள் அதிகரிக்க மற்றும் வறட்சி, பூச்சி நோய்களைத் தாங்கி வளர்ந்து அதிக மகசூல் பெறுவதற்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் செய்வது மிக அவசியமாகும்.
தொழு உரம் :
ஒரு ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் உரத்தினை இட்டு நிலத்தினை 4-5 தடவை நன்கு உழவு செய்ய வேண்டும்.
இரசாயன உரங்கள்
பேரூட்ட மற்றும் நுண்ணுயிர்ச் சத்துக்கள் இட்ட மகசூலை அதிகரிக்கலாம்.
• தழைச்சத்து உரங்கள் பயிர் வளர்ச்சிக்கு உதவுகின்றன
• மணிச்சத்து உரங்கள் வேர் வளர்ச்சிக்கும் காய்கள் உருவாகவும்
• சாம்பல் சத்து உரங்கள் தரமான மகசூலுக்கும் பூச்சி, நோய், வறட்சி தாங்கிடவும்
• நுண்ணூட்ட சத்துக்கள் பயிர் குறைபாடு இன்றி வளர்ந்து மற்ற சத்துக்களை எடுக்க உதவுகின்றன.
பேரூட்ட ச் சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை அடியுரமாக இடவேண்டும்.
மேலும் போராக்ஸ் 4 கிலோ மற்றும் நுண்ணுயிர் கலவை 5 கிலோவும் இடவேண்டும். போராக்ஸ் மற்றும் நுண்ணூட்டக் கலவையை விதைப்பு முடிந்தவுடன் நிலத்தின் மேல் இடவேண்டும்.