வெண்டையைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் ஒரு அலசல்... தீர்வும் இருக்கு...

Pest and diseases of the pest attack are a solution ...
Pest and diseases of the pest attack are a solution ...


1.. காய்த்துளைப்பான்: 

வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகம் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கையில் வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்கவேண்டும். 

Latest Videos

ஹெக்டேருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும். கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.
 
2.. சாம்பல் நிற வண்டு: 

இதைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி. குருணை மருந்து ஹெக்டருக்கு 12 கிலோ இடவேண்டும். நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஹெக்டருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கை விதைக்கும்போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஹெக்டேருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து ஒரு கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து ஒரு கிலோ இடவேண்டும்.
 
3.. அசுவினிப்பூச்சி: 

இதைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத்தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
 
4.. மஞ்சள் நரம்புத் தேமல் நோய்: இது மிகவும் அதிக அளவில் வெண்டையைத் தாக்கும் நச்சுயிரி நோய். இந்நோய் வெள்ளை ஈ என்ற பூச்சியால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. 

இப்பூச்சியை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு 2 மில்லி வேப்பெண்ணெய் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவேண்டும். கோடைக்காலத்தில் இந்நோய் அதிக அளவில் வெண்டையைத் தாக்கும். 

இப்பருவத்தில் நோயை எதிர்த்து வளரும் பார்பானி கிராந்தி போன்ற ரகங்களைப் பயிரிடுவது நல்லது. மேலும் இந்நோயைத் தாங்கி வளரும் ரகங்களான பார்பானி கிராந்தி, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப் போன்றவற்றை சாகுபடி செய்யவேண்டும்.
 
5.. சாம்பல் நோய்: 

இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். பிறகு 15 நாள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்கவேண்டும்.

click me!