வெள்ளைக் கழிச்சல் நோய்க்கு தீர்வு பஞ்சகவ்யா…

 |  First Published Dec 23, 2016, 11:50 AM IST



சேவல்களுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து சிறப்பான முறையில் வளர்க்கலாம்.

சேவல்களுக்கு பஞ்சகவ்யா கொடுத்தால் வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்காது என்று உங்களுக்குத் தெரியுமா?

Tap to resize

Latest Videos

எங்கிட்ட கீரி, மயில், காகம், வல்லூறு, ஆந்தை, பொன்னிறம்னு பல இரகங்களில் 150 சண்டைச் சேவல்களுக்கும்  வெள்ளைக்கழிச்சல் நோய்தான் எமன்.

கோடைகாலத்துல இந்த நோய் தாக்கும். ஒரு கோழிக்கு கழிச்சல் வந்திட்டா, எல்லா கோழிகளுக்கும் வேகமாகப் பரவ ஆரம்பித்து விடும்.

இதை சரியாக கவனிக்காவிட்டால் கோழிகளை காப்பாற்ற முடியாது. முறையாக பஞ்சகவ்யா கொடுக்கிற கோழிகளுக்கு, இந்த நோய் தாக்குவதில்லை.

வெயில் காலங்களில் கோழிகள் தண்ணீர் அதிகமாக குடிக்கும். அதனால் குடிநீரிலே பஞ்சகவ்யாவைக் கலந்து வைத்து விட வேண்டும்.

100 மில்லி தண்ணீருக்கு 3 மில்லி பஞ்சகவ்யானு கலந்து வைத்துவிட வேண்டும்.

குறிப்பாக. பருவம் மாறும் காலங்களில் இதை தொடர்ந்து கொடுக்க ஆரம்பித்தால், கழிச்சல் நோய் தாக்காது.

கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு மாதிரியான சிறுதானியங்கலை, வடிகட்டிய 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து, நிழலில் உலர்த்தி வாரம் ஒரு நாள் கொடுக்கலாம்.

அதனால் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து எந்த நோயும் வராது.

click me!