தேர்வு செய்த நிலத்தில் சேற்றுழவு செய்து 12 நாள்கள் ஆறவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்து 3 நாள்கள் ஆறவிட வேண்டும்.
பிறகு 72 அடி நீளம், மூன்றரையடி அகலம், 3 அங்குல உயரத்தில் மேட்டுப்பத்தி அமைத்து அதில் 50 கிலோ கனஜீவாமிர்தத்தை (பவுடர் வடிவில் இருக்கும்) தூவ வேண்டும்.
பின்னர், 15 கிலோ கிச்சலிச்சம்பா விதையைப் பாத்தியில் பரவலாகத் தூவ வேண்டும்.
பிறகு 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி வைக்கோலைப் பரப்பி விதைகளை மூட வேண்டும்.
தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் வைக்கோல் மீது தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
விதைத்த 5-ம் நாள் மூடாக்கை நீக்க வேண்டும்.
6-ம் நாள் 2 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை 24 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
9-ம் நாள் 20 கிலோ கனஜீவாமிர்தத்தில் தேவையான அளவு ஜீவாமிர்த கரைசலை கலந்து புட்டுப் பதத்தில் பிசைந்து தூவ வேண்டும்.
15-ம் நாளுக்கு மேல் நாற்றுகள் தயாராகிவிடும்.