விளை பொருள்களின் விலை அதன் தரத்தைக்கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. உரிய நேரத்தில் அறுவடை செய்ததாலும் அறுவடையின் போது தகுந்த யுக்திகளை கடைபிடிக்காததாலும் அறுவடைக்குப் பின்செய்நேர்த்திகளை சரிவர செய்யாததாலும் விளை பொருட்களின் தரம் குறைந்துவிடுகிறது.
தரம் குறைந்த விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லும்பொழுது குறைந்த விலையே பெற முடிகிறது.
undefined
நெல்மணிகளை உரிய தருனத்தில் அறுவடை செய்து நன்கு சுத்தம்செய்து காயவைத்து சரியான ஈரப்பத்தத்தில் நல்ல சுத்தமான சாக்கு பைகளில் அடைத்து விற்பனைக்கு கொண்டுசென்றால் நல்ல விலை கிடைக்க ஏதுவாகும்.
நெல் மணிகள் கூடுதல் விலை பெறுவது அதில் உள்ள முழு அரிசியின் அடிப்படையில்தான் உள்ளது. நெல் மணிகள் அறவையில் 62 சதம் முழு அரிசி கிடைத்திட மேற்கொள்ளவேண்டிய அறுவடை பின் செய்நேர்த்தி முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
அறுவடை பின்செய் நேர்த்திமுறைகள்:
1. நெல் ரகங்களின் வயதிற்கேற்றவாறு பயிரின் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ளவேண்டும்.
2. நெல் கதிரின் மணிகள் 80% மஞ்சள் நிறமாக மாறி இருந்தாலேயே அறுவடையை மேற்கொள்ளலாம். இதனால் மணிகள் உதிர்வதை தடுக்கலாம்.
3. அறுவடையின்போது 19 முதல் 23 சதம் வரை ஈரப்பதம் இருக்கவேண்டும்.
4. முதிர்ந்த நெல் மணிகளின் அரிசி கடுமையானதாகவும், உறுதியானதாகவும், இருக்கும்.
5. அறுவடை செய்த நெல்லை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
6. அதிக சூரிய வெப்பத்தில் நெல்லை காயவைக்ககூடாது.
7. காய வைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதத்திற்குள் இருக்க வேண்டும்.
8. அதிக ஈரப்பதமுள்ள நெல் மணிகளைச் சேமித்துவைத்தால் பூஞ்சான வித்துக்கள் பரவி நெல்லின் தரம் பாதிக்கப்படும்.
9. நெல்லை சுத்தமான கோணிப்பைகளில் நிரப்பி தரையின் மீது மரச்சட்டங்கள் அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி அதன் மேல் முட்டைகளை அடுக்கி வைக்கவேண்டும்.
உணவு தானிய உற்பத்தி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதன் சேமிப்பு நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்களில் பெரும்பகுதி பூச்சி, பூஞ்சானம், எலி, மற்றும் பறவைகளால் பெரும் அளவில் சேதமடைகிறது.
விதை சேமிப்பின் அவசியம்:
முறையாக சேமிக்கப்படாத தானியங்கள் தரத்தையும், எடையையும் இழக்க நேரிடுகிறது. காவிரி பாசன பகுதிகளில், காற்றின் ஈரப்பதமும் மற்றும் வெப்பக் காற்றும் அதிகமாக இருப்பதால், விதைகள் வெகு எளிதில் கெட்டுவிட வாய்ப்பு உல்ளது. அதனால் விதைகளை விதைக்கும் முன்னர் சேமிப்பது என்பது முக்கியமான ஒன்றாகும்.
மேலும் விவசாயிகள் தன் வயலில் விளைந்த நெல் மற்றும் தானியங்களை சேகரித்து விதைகளாகப் பயன்படுத்துகின்றார்கள். இதனால் விதைகளில் இனக்கலப்பு ஏற்பட்டு அதன் தூய்மை கெடுவதுடன் வீரியமும் குறைந்து விளைச்சல் இழப்பும் ஏற்படுகின்றது.
மழை காலங்களில் விதைப் பயிரை அறுவடை செய்யும் போது மழையில் நனைந்த விதைகள் பூச்சிப் பூஞ்சான நோய்களால் பாதிக்கப்படுகின்றன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட விதைகளை சேமிக்கும் போது அதன் வீரியமும் முளைப்பு திறன் மற்றும் வீரியத் தன்மை குறையாமல் அடுத்த விதைப்புக் காலம் வரை பொஆதுகாத்து வைப்பது அவசியம்.
ஈரப்பதம் நாம் சாக்கு பைகளிலும், குதிர்களிலும், களஞ்சியங்களிலும் நெல் விதைகளை சேமித்து வைக்கின்றோம். இவை அனைத்தும், விதைகளை பல்வேறு தட்ப வெப்ப நிலைகளிலும், காற்றின் ஈரப்பதத்திலும் அடிக்கடி ஏற்படும் மாறுதல்களிலிருந்து பாதுகாப்பதில்லை.
விதைகளை சேமிப்பதற்கு முன் அதன் ஈரப்பதம் 13 சதம் இருக்குமாறு காய வைக்கவேண்டும். விதையிலுள்ள நீரின் அளவையே விதையின் ஈரம் என்று சொல்கிறொம். அறுவடை செய்யும்போது விதையின் ஈரம் 15-22 சதவீதம் இருக்கும்.
சேமிக்கும்போது விதை ஈரம் 13 சதத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும். விதை ஒரு உயிருள்ள பொருள், விதை சுவாசிக்கும் போது வெளியிடப்படும் வெப்பமும், விதையின் ஈரமும் சேர்ந்து விதயின் தரத்தை பாதிப்பதுடன் பூச்சி நோய் தாக்குதலுக்கும் வழி வகுக்கின்றன.
எனவே குறைவான விதை ஈரத்துடன் விதையை அதிக நாட்களுக்கு சேமித்து வைக்க இயலும்.