ஒட்டுரக தக்காளியில் நேர்த்தியுடன் லாபம் கண்ட விவசாயி.

Asianet News Tamil  
Published : Feb 24, 2017, 12:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
ஒட்டுரக தக்காளியில் நேர்த்தியுடன்  லாபம் கண்ட விவசாயி.

சுருக்கம்

3 ஏக்கரில் தோட்டத்தில் காய்கறி பயிர் செய்யும் பலரைக் கண்டு இருக்கிறோம். மழை இல்லாததால் போர்வெல் வறண்டு போயிடுச்சி. இருக்கும் தண்ணீரை வைத்து ஒரு ஏக்கரில் பயிர் சாகுபடி செய்தேன் அதுவும் போச்சு என்பர்.

இங்கு ஒரு ஏக்கரில் தக்காளி பயிர் செய்து மூன்றாண்டுகளாக தக்காளியில் நல்ல லாபம் பார்க்கிறார் கதிர்.

தோட்டக்கலை துறையில் 60 கிராம் ஒட்டுரக விதை வாங்கினேன். ஆனால் ஒரு ஏக்கருக்கு அது போதாது என நினைத்து வெளியிலும் விதை வாங்கினேன் என்றார் கதிர்.

குழித்தட்டு முறையில் நாற்றங்கால் உற்பத்தி செய்யலாம் என்றால் வெயில் அதிகமாக இருந்ததால் நாற்றுகள் இறந்துவிட்டன.

மேட்டுப்பாத்தி முறையில் நாற்றுகள் தயாரித்தேன். நான்கு கம்பியை இழுத்துக்கட்டி 100 அடி நீளத்திற்கு கட்டுக்கம்பியை கட்டி இடையிடையே செம்புக்கம்பியை தரையில் ஊன்றி இழுத்து கட்டினேன். அதன் மேல் தக்காளி படர்ந்தது. நல்ல மழை பெய்தபோதும் தக்காளி தரையில் படராமல் கம்பிகளில் படர்ந்ததால் தப்பித்தேன்.

கார்த்திகை, மார்கழி மாதங்களில் நல்லவிலை கிடைத்தது. உரம், பூச்சிக்கொல்லி மருந்து என உரிய நேரத்தில் கவனித்ததால் ஏக்கருக்கு 30 டன் தக்காளி கிடைத்தது.

சரியான முறையில் விவசாயம் செய்தால் நட்டத்திற்கு வாய்ப்பில்லை என்றார் கதிர்.

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: ரூ.15,000 வரை மானியம்..! விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க வேண்டிய திட்டம் இது..!
Crop Loan Waiver 2026: பயிர்க்கடன் முழுசா தள்ளுபடி! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம் இதோ!