இயற்கை முறையில் சூரிய காந்தி சாகுபடி செய்யலாம்…

 
Published : Sep 15, 2017, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
இயற்கை முறையில் சூரிய காந்தி சாகுபடி செய்யலாம்…

சுருக்கம்

Nature of sunshine can be cultivated ...

சூரியகாந்தி பயிரின் வயது 80-85 நாட்களாகும்.

சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் அட்வான்ஸ் கார்கில், கே.பி.எஸ்.எச்.1, மாடர்ன் மற்றும் கோ.3. ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும்.

நீண்ட கால விதை ரகங்களை 60-க்கு 15 செ.மீ. இடைவெளியிலும், குறுகிய கால விதை ரகங்களை 30-க்கு 15 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.

விதை முளைப்பு சீராக இருப்பதற்கு தண்ணீரில் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

நீண்டகால ரகமாக இருந்தால் சதுரமீட்டரில் 12 செடிகளும், குறுகிய கால ரகமாக இருந்தால் சதுர மீட்டரில் 24 செடிகளும் இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கிலோ விதையுடன் 42 கிராம் திரம் என்னும் மருந்தைக் கலந்து விதைக்க வேண்டும்.

ஏக்கருக்கு 10 முதல் 20 வண்டிகள் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நிலத்தைப் பண்பட உழ வேண்டும்.

தொழு உரத்தோடு உயிர் உரமாகிய அசோஸ்பைரில்லம் கலந்து இடவேண்டும்.

10 கிலோ தொழு உரம், 10 கிலோ மண் இவற்றுடன் 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தையும் கலந்து வயலில் சீராகத் தூவ வேண்டும்.

ஏக்கருக்கு அடி உரமாக தழைச்சத்து 8 கிலோ, மணிச்சத்து 8 கிலோ, சாம்பல்சத்து 8 கிலோ ஆகியவை கிடைப்பதற்கு ஏற்ற ரசாயன உரங்களை இடவேண்டும்.

கடைசியாக 5 கிலோ நுண்ணூட்டச் சத்துக்களை 15 கிலோ ஆற்று மணலுடன் கலந்து ஏக்கர் பரப்பில் சீராகத் தூவ வேண்டும்.

விதையுடன் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தைக் கலந்து விதைக்கலாம். விதைக்கும் நிலத்தில் விதையை உளுந்து தெளிப்பது போல் தெளித்து விதையை மண்ணால் மூடி, பின் பாத்தி கட்டி பாசனம் செய்து சதுர மீட்டரில் ரகங்களுக்குத் தக்கவாறு 12 அல்லது 24 செடிகள் உள்ளபடி செய்து அதிகமாக இருக்கும் செடிகளைக் களைந்துவிடலாம்.

இல்லையேல் பாருக்கு பார் 60 அல்லது 30 செ.மீ. உள்ளபடி அமைத்துக் கொண்டு விதையை பாருக்கு பக்கவாட்டில் 15 செ.மீ. இடைவெளியில் ஊன்றலாம்.

10வது நாளில் நன்கு வளர்ந்த ஒரு செடியை விட்டுவைத்து மற்ற செடிகளைக் களையெடுக்க வேண்டும்.

சூரியகாந்தி பயிருக்கு ஒரு முறை களையெடுத்து நிலத்தைக் கொத்திவிட்டு பின் மீதமுள்ள தழைச்சத்தாகிய 18 கிலோ அளவை மேலுரமாக இடவேண்டும். இதற்கு 18 கிலோ யூரியா இடவேண்டும்.

விதை விதைப்பதற்கு முன் விதைத்த நான்காம் நாள் உயிர்த்தண்ணீர், விதைத்த 20ம் நாள், 35ம் நாள், 40ம் நாள், 60ம் நாள், 20-25வது நாள் மொட்டுகள் உருவாகும் சமயம், 30-45வது நாள் பூக்கள் மலரும் போதும், 50-60வது நாள் விதை முற்றும் சமயம் மண்ணில் ஈரம் இருக்கும்படியாக நீர் பாய்ச்ச வேண்டும்.

நிலத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும். அறுவடைக்கு ஒரு வாரம் முன் பாசனத்தை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்.

விதைத்த 30-வது நாள் ஏக்கருக்கு 111 மில்லி பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கியை 250 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது பூக்களில் அதிக விதை பிடிக்க உதவுகின்றது.

சூரியகாந்தியில் அயல் மகரந்த சேர்க்கையை ஏற்படுத்தி அதிக விதை உற்பத்தி செய்யலாம். இதற்கு பூ மலர்ந்த பிறகு காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் தொடர்ந்து 10 நாட்களுக்குள் மற்றொரு பூவுடன் உராயும்படி செய்ய வேண்டும்.

பூக்களில் விதைகள் முதிர்ச்சி அடையும்போது பச்சைக்கிளிகள் பூக்கொண்டைகளை அலகால் கொத்தி கடும் சேதத்தை உண்டாக்கும். டப்பாக்களைத் தட்டி சத்தம் எழுப்பி கிளிகளைத் துரத்தவேண்டும்.

சூரியகாந்தி பூக்களின் அடி பாகம் மஞ்சள் நிறமாக மாறிய உடன் பூக்களை அறுவடை செய்து களத்துமேட்டில் காயப்போட வேண்டும். பூக்கள் சரியாக காயாமல் இருக்கும்போது கோணிச்சாக்கில் சேமித்தால் அவற்றில் பூசணம் வளர்ந்து நஷ்டம் ஏற்படும்.

களத்துமேட்டில் அடிக்கடி பூக்களை கிளறிவிட்டு நன்கு காயப்போட வேண்டும். நன்கு உலர்ந்த பூக்களை தடியால் அடித்து விதையைப் பிரித்து அவற்றை சுத்தம் செய்து விற்பனை செய்துவிடலாம்.

நல்ல முறையில் சாகுபடி நுட்பங்களை அனுசரித்தால் கணிசமான லாபத்தை அடைய முடியும்.

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!