அதிக சுவை கொண்ட காலிபிளவர் சாகுபடி செய்து அதிக லாபத்தை அடையலாம்…

 |  First Published Sep 15, 2017, 1:12 PM IST
Cauliflower cultivation with high taste can be more profitable ...



காலிபிளவர் சாகுபடி

காலிபிளவர் அதிக சுவையுள்ள உணவுப் பொருள். காலிபிளவரில் கால்சியம் அதிகம் உள்ளது. இது நரம்பை பலமாக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது நல்ல உணவு. எனவே இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

Tap to resize

Latest Videos

காலிபிளவர் கன்று ஒன்று 50 பைசாவுக்கு ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கின்றன. ஒரு ஏக்கர் நிலத்தில் 15 ஆயிரம் கன்றுகள்வரை வைக்கலாம். கன்றுகள் வைத்து முறையாக பராமரித்து வந்தால் 60 நாள்களில் பூக்கள் வர ஆரம்பிக்கும். 80 நாள்களில் பூக்களை அறுவடை செய்ய முடியும்.

காலிபிளவர் செடிகள் வாங்குவது மற்றும் உரங்கள், உழவுக் கூலி, களைச் செடிகள் எடுப்பது, பூச்சிக் கொல்லி மருந்துகள் என மொத்தம் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால், இதனால் வருமானம் என்பது ரூ.1 இலட்சம் வரை கிடைக்கும்.

காலிபிளவரின் ஒரு செடியில் இருந்து ஒரே ஒரு பூ மட்டுமே வரும். ஒரு ஏக்கரில் நடப்படும் 15 ஆயிரம் செடிகளில் 7,500 செடிகள் நல்ல முறையில் வளர்ந்து பூக்கள் வந்தால் கூட போதுமானது.

காலிபிளவர் நல்ல லாபம் தரும் பயிர். குறிப்பாக பனிக்காலங்களில் பயிர் செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். கார்த்திகை மாதத்துக்கு முன் பயிர் செய்து தை மாதத்துக்குள் மகசூல் எடுத்துவிட வேண்டும்.

காலிபிளவர் சாகுபடி செய்யும் கால நிலைகளையும், மண்ணின் தன்மையையும், அறுவடை செய்யும்போது காலிபிளவர் பூக்களின் மார்க்கெட் நிலவரத்தையும் விவசாயிகள் தெரிந்து கொண்டு பயிர் செய்தால் அதிக லாபம் பெறமுடியும்.

click me!