கிணற்றில் உள்ள தண்ணீரை வைத்து கூட, கீரை பயிரிடலாம். 50 சென்ட்டில் ,200 பாத்தி வரை அமைக்கலாம்.
ஒரு பாத்திக்கு 50 கிராம் விதையை தூவ வேண்டும். விதை தூவிய பின், தினமும் தண்ணீர் பாய்ச்சுவதோடு, களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து தெளித்து, முறையாக கவனித்து வர வேண்டும்.
ஒரு மாதத்திற்கு பின் கீரை நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாராகும். தண்டுகீரை, அரைக்கீரை, சிறு கீரை, பாலைக்கீரை, பருப்பு கீரை, வெந்தயகீரை, புளிச்சகீரை, பொன்னாங்கண்ணி கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை போன்று, மருத்துவ குணமுள்ள கீரைகளை அதிகளவில் பயிரிடலாம்.
நாள் ஒன்றுக்கு, 300 முதல் 500 கட்டு (ஒரு கட்டு 250 கிராம்) அறுவடை செய்யலாம். ஒரு கட்டு ரூ.10-க்கு விற்பதன்மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.3500 வருவாய் கிடைக்கும்.
உரம், பூச்சி மருந்து, விவசாய கூலியாட்கள் சம்பளம் என்ற விகிதத்தில் ரூ.1500 செலவு போக, தினமும் கீரை மூலம் ரூ.2000 வீதமும், மாதம் ரூ.60 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.