நிழல்வகைக் குடில்:
இவ்வகைக்குடில் காய்கறி சாகுபடி செய்வதற்கும், நாற்றங்கால் உற்பத்தி செய்வதற்கும் மிகவும் இலாபகரமானவை. நிழல்வகைக் குடில் கூரையாக 25 முதல் 75 விழுக்காடு நிழல் தரக்கூடிய நிழல்வலை கூரையாகப் போர்த்தப்படுகிறது. மேலும் பக்கச் சுவர்களுக்கு பதிலாக பூச்சிகள் உட்புகாத நைலான் வலை கொண்டு அமைக்கப்படுகிறது.
பசுமைக்குடில் போன்று தொடர் கூடாரமாக இல்லாமல் பரப்பில் பெரியதாகவும், ஒரே வலைக் குடிலாகவும் எளிதாக அமைக்க முடியும். மேலும் தரமான கடினமான மரம், கல் மற்றும் கான்கிரீட் தூண்கள், அலுமினிய குழாய்கள், இரும்புக் குழாய்கள் கொண்டு நிழல்வலைக் குடிலை அமைக்கலாம்.
சமவெளிப்பிரதேசங்களில் காய்கறி சாகுபடிக்கு பச்சை நிற அல்லது கறுப்பு நிற 35 முதல் 50 விழுக்காடு நிழல் தரக்கூடிய வலை விரிப்புகளை பயன்படுத்தி காய்கறி உற்பத்தி செய்யலாம். இதனால் தக்காளி, குடைமிளகாய், பூக்கோசு, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி லாபகரமாக சாகுபடி செய்வதோடு நிழல்வலைக்குடில் மிகவும் ஏற்றது.
நிழல்வலைக்குடிலை அமைக்கும் செலவு குறைவு. வீரிய ஒட்டு காய்கறி நாற்றங்கால், உற்பத்தி விலைமதிப்பு மிக்க காய்கறிகளை உற்பத்தி செய்யலாம்.