இரகங்கள்
கிளாடியேட்டர், பேபி பிங்க், சோபியா லாரன்ஸ், YCD 1, YCD 2, YCD 3 போன்றவை பொதுவாக சாகுபடி செய்யப்படுகின்றன.
மண் மற்றும் காலநிலை:
இது அதிக உயரத்திற்கு (1500 மீ மற்றும் அதற்கு மேல்) ஏற்றது. இது சமவெளிகளில் வளமான வண்டல் மண் மற்றும் உப்பு இல்லாத நீரில் வளரும். ரோஜா வளர சிறந்த வெப்பநிலை குறைந்தபட்சம் 150 செ மற்றும் அதிகபட்சம் 280 செ ஆகும். வளர்ச்சியை தீர்மானிப்பதில் ஒளி முக்கிய காரணியாகும்.
நாளின் நீளம் 12 மணி நேரத்திற்கும் குறைவாக இருந்தால் மேக மூட்டம் அதிகமாக இருந்தால் வளர்ச்சி மெதுவாக இருக்கும். அதிக ஈரப்பதமான சூழ்நிலையிருந்தால் செடியை பூஞ்சை நோய் தாக்கும்.
வெப்ப மண்டலங்களில் வெயில் காலங்களில் 250 – 300 செ மற்றும் மேகமூட்டம் உள்ள நாட்களிவ் 180 – 200 செ. உகந்த வெப்பநிலை 150 – 180 செ ஆகும்
ரோஜா இனப்பெருக்கம் மற்றும் நடவு:
மலைப்பகுதிகளில் வேர்த் துண்டுகள் மற்றும் பதியன் நாற்றுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு வயதுடைய பதியன் கன்றுகள் 75 X 75 செ.மீ இடைவெளியில் நடப்படுகிறது.
பின்செய் நேர்த்தி:
செடி வளரும் வரை தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு வாரம் ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் கவாத்து செய்தல் வேண்டும்.
களைகளை கட்டுப்படுத்த டையூரான் எக்டருக்கு 2.5 கிகி தெளிக்க வேண்டும். தெளிப்பு மருந்துகளை தவிர்க்க வேண்டும்.
படுக்கைகள் மண் தளர்துதல்:
6 மாதங்களில் மண் கட்டியாக வாய்ப்பு உள்ளது. இதை பாசனம் மூலம் தளர்த்த வேண்டும்.
வளைதல்:
இலை ஒவ்வொரு தாவரத்திற்கும் உணவுக்கு ஆதாரமாக உள்ளது. நடவுக்குப் பிறகு, 2 முதல் 3 கண் மொட்டுகள் முக்கிய கிளையில் முளைவிடும். இந்த முக்கிய தண்டுகள் வளைக்கப்பட்டு மண்ணில் வைக்கப்படுகிறது.
இவை இரண்டு தளிர்களுடன் வளரத் தொடங்கும். இவை இரண்டு அல்லது மூன்று தளிர்கள் ஐந்து இலைகள் கொண்டு அமைப்பு உருவானவுடன் வெட்டி எடுக்கப்படுகிறது.
இலைகள் நீக்கம்
இது சில தாவர இனங்கள் பூத்தலைத் தூண்ட முக்கியமாக செய்யப்படுகிறது. இலை நீக்கம் முறையாக கைகளால் அல்லது தண்ணீர் அளித்து செய்யப்படலாம். தளிர்கள் கவாத்தின்போது சீரமைக்கப்படுகின்றன.
உரமிடுதல்:
மூன்று மாத இடைவெளியில், கவாத்திற்குப் பிறகு 10 கிகி தொழுவுரம் மற்றும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 8:8:16 கி என்ற அளவில் ஒரு செடிக்கு அளிக்க வேண்டும். வருடத்திற்கு செடிக்கு 75:150:50 என்ற அளவில் வருடத்திற்கு செடிக்கு அளிக்க வேண்டும்.
அறுவடை:
இதழ்கள் முழுவதும் விரியாமல், முழுமையான நிறம் வந்தவுடன் அறுவடை செய்யலாம். 1-2 முதிர்ந்த இலைகளை விட்டு பூவை வெட்டி எடுக்க வேண்டும். புதிய வலுவான தண்டுகள் வளர இந்த முதிர்ந்த இலைகளை விட வேண்டும். அதிகாலையில் அறுவடை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.