கம்போரோ நோய் தாக்கிய கோழிகளில் மேற்கொள்ள வேண்டிய மேலாண்மைகள்...

 |  First Published Nov 21, 2017, 12:55 PM IST
Management to take on chickens



கம்போரோ நோய்

நோயின் தன்மை

** இந்நோய் கோழிகளைத் தாக்கக்கூடிய ஒரு கொடிய தொற்று நோயாகும்.

** இந்நோய் கம்பாரோ நோய் அல்லது இன்ஃபெக்சியஸ் பர்சைட்டிஸ் அல்லது ஏவியன் நெஃப்ரோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

** 0-6 வார வயதான கோழிக்குஞ்சுகள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

** இந்நோயினால் பாதிக்கப்படும் விகிதம் 100%, ஆனால் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் கோழிகளின் விகிதம் – 80-90%.

** பி லிம்போசைட்கள் இந்நோய் ஏற்படுத்தும் வைரஸால் முதன்மையாகப் பாதிக்கப்படுகின்றன. இந்நோய் ஏற்படுத்தும் வைரஸ் கோழிக்குஞ்சுகளிலுள்ள பர்சா எனும் நோய் எதிர்ப்பு சக்தியினை உற்பத்தி செய்யும் உறுப்பை பாதிக்கிறது.

** இந்நோய் ஏற்படுத்தும் வைரஸ் கோழிகளின் உடலில் நுழைந்த பிறகு நோய் அறிகுறிகளை வெளிப்படுத்த எடுத்துக்கொள்ளும் நாட்கள் 2-3 நாட்களாகும்.

** இது ஒரு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த, 3-6 வாரக் கோழிக்குஞ்சுகளில் அதிக இறப்பையும் , வயதான கோழிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் ஒரு நோயாகும்.

** இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து, மற்ற நோய்களின் தாக்குதலும் அவற்றிற்கு ஏற்படும்.

** நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் கோழிகளுக்கு தடுப்பூசி அளித்தவுடனும் எதிர்ப்பு சக்தி உருவாமல் இருத்தல், ஈ.கோலை பாக்டிரியாவால் ஏற்படும் நோய், தோல் அயற்சி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இரத்தசோகை அறிகுறிகள் ஏற்படுகின்றன.

நோய்க்கான காரணங்கள்

** பிர்னா விரிடே குடும்பத்தைச் சேர்ந்த, ஏவி பிர்னா வைரஸ் ஜீனஸ் வகையினைச் சேர்ந்த பிர்னா வைரஸ் இந்நோயினை ஏற்படுத்துகிறது.

** இந்த வைரஸ் கோழிப்பண்ணை சுற்றுப்புறத்தில் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்கும். மேலும் இந்த வைரஸ் ஒரு கொடிய நோய் தொற்றாகும்.

** இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகள் இந்த வைரஸை அவற்றின் எச்சத்தில் 10-14 நாட்களுக்கு வைரஸை வெளியேற்றும்.

** நோய் பாதிக்கப்பட்ட கோழிகள் உள்ள கோழிக்கொட்டகைகளில் இந்த வைரஸ் 120 நாட்களுக்கு உயிரோடு இருக்கும்.

** இந்த வைரஸ் ஒரு கடினத்தன்மை வாய்ந்த வைரஸாகும். வெப்பம், சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல் போன்ற முறைகளின் மூலம் இந்த வைரஸ் கொல்லப்படாது.

** இரண்டு நோய்க் கிளர்ச்சிகளுக்கிடையே இந்த வைரஸ் சுற்றுப்புறத்தில் உயிரோடு இருக்கும்.

** கொசுகள், சிறிய பூச்சிகள் போன்றவை இந்நோயினை பரப்புவதில் பங்கு வகிக்கின்றன. மேலும் இந்த பூச்சிகளில் வைரஸ் 8 நாட்களுக்கு உயிரோடு இருக்கும்.

** முட்டை அட்டைகள், கோழிகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள், முட்டைகள் மற்றும் கோழிகளைக் கையாளும் பணியாட்கள், போன்றவை இந்நோயினைப் பரப்பும் திறனுடையவை.

** மனிதர்கள், வனப்பறவைகள், பூச்சிகள் போன்றவை வைரஸை ஒரிடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு எடுத்துச்செல்லும்.

** ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு இந்நோய் ஏற்படுத்தும் வைரஸ் பரவாது (அதாவது முட்டைகளின் மூலம் இந்த வைரஸ் பரவுவதில்லை).

** வயதான கோழிகள் (பர்சா உறுப்பு அளவில் குறைந்து விடுவதால்) இந்நோய்க்கெதிரான அதிக எதிர்ப்புத்திறனைப் பெற்றுள்ளன.

நோய் அறிகுறிகள்

** பாதிக்கப்பட்ட கோழிகள் தங்களது ஆசன வாயினை கொத்திக் கொண்டிருக்கும்.

** தீவனம் எடுக்காமை

** கோழிக்குஞ்சுகள் சோர்ந்து வெள்ளை நிறக் கழிச்சல் ஏற்படுதல்

** ஆசன வாய் ஈரமாகக் காணப்படுதல்

** இறகுகள் சொரசொரவென்று தூக்கிக்கொண்டு இருத்தல்

** பாதிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுதல்

** கண்கள் மூடி, இறப்பு ஏற்படுதல்

நோய்த் தடுப்பு முறைகள்

** கோழிக்குஞ்சுகளின் இரண்டு வார வயதில் அவைகளுக்கு வீரியம் குறைவான அல்லது இன்டர்மீடியேட் ஐபிடி தடுப்பூசி போடுதல்

** இன்டர்மீடியேட் வைரஸ் தடுப்பூசியினை மூன்று வார வயதில் மீண்டும் அளித்தல்.

click me!