நியூ கேசில் நோய் அல்லது ராணிக்கெட் நோய்
நோயின் தன்மை
** நியூகேசில் நோய் கோழிகளைத் தாக்கக்கூடிய வைரஸால் ஏற்படும் தொற்று நோயாகும். இந்நோய் விரைவில் பரவக்கூடியதும், சுவாச மற்றும் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நோயாகும்.
** முதலில் சுவாச மண்டல நோயாக வெளிப்பட்டு,பிறகு கோழிகளில் நரம்பு மண்டலக் கோளாறுகள், கழிச்சல் ஏற்படுத்தும் நோயாகும். கழிச்சல் இந்நோயின் பிரதான அறிகுறியாகும்.
** கோழிகள் இந்நோயினால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. ஆனால் தண்ணீரில் வளரும் கோழியினங்கள் குறைவாக பாதிக்கப்படுகின்றன.
நோய்க்கான காரணங்கள்
** பாராமிக்சோ வைரஸ் 1
** கோழிகளில் ஏற்படும் நோய்த் தாக்குதலைப் பொறுத்து நியூகேசில் நோயினை விசரோடிராப்பிக் வீலோஜெனிக் (அதிக வீரியம்), நியூரோடிராப்பின் வீலோஜெனிக், மீசோஜெனிக் (நடுத்தர வீரியம்), லென்டோஜெனிக் (குறைவான வீரியம்) மற்றும் நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தாத நிலை.
** பல்வேறு இயற்பியல் (வெப்பநிலை, ஒளி, அமில காரத்தன்மை ) மற்றும் இரசாயனப் பொருட்கள் (பொட்டாசியம் பர்மாங்கனேட், ஃபார்மலின், எத்தனால் போன்றவை) இந்த வைரஸை கொல்லக்கூடிய திறன் படைத்தவை.
** புகை மூட்டுவதன் மூலம் கட்டிடங்கள் மற்றும் குஞ்சு பொரிப்பகங்களில் இந்த வைரஸைக் கொல்வதற்கு உபயோகப்படுத்தலாம்.
** இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகள் இந்நோய்க்கிருமியைப் பரப்புவதல் முதன்மையாக இருக்கின்றன.
** நோய் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு முன்பாகவும், நோய் அறிகுறிகளை வெளிப்படும் போதும், இந்த வைரஸ் கோழிகளின் எச்சம், சளி போன்றவற்றில் வெளியேறும். ஆனால் நோயினால் குணமடையும் போது குறைவான அளவு வைரஸை மட்டுமே கோழிகள் வெளியேற்றும்.
** நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் மூச்சுக் காற்று, மூக்கிலிருந்து வெளியேறும் சளி, எச்சம் போன்றவற்றின் வழியாக இந்த வைரஸை வெளியேற்றுவதால் தீவனம் மற்றும் தண்ணீர் போன்றவை இந்நோய்க்கிருமியால் மாசடையும்.
** மூச்சுக் காற்று வழியாகவும், வாய் வழியாகவும் இந் நோய்க்கிருமி கோழிகளின் உடலுக்குள் செல்லும்.
** நோய் அறிகுறிகளைக் கோழிகள் வெளிப்படுத்தும் போது முட்டையிலும், இறந்த கோழிகளின் உடலிலும் இந் நோய்க்கிருமி அதிக அளவு இருக்கும்.
** வனப் பறவைகள், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பறவைகள், மனிதர்களின் நடமாட்டம், கோழிப்பண்ணை உபகரணங்கள், கோழிகளால் உற்பத்தி செய்யப்படும் முட்டை, இறைச்சி போன்ற பொருட்களும் நோய்க்கிருமியினைப் பரப்புவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
** மனிதர்களின் சுவாச மண்டலத்தின் வெளிச்சவ்வில் இந்த வைரஸ் நீண்ட நாட்களுக்கு வாழும் தன்மையுடையது.
நோய் அறிகுறிகள்
** கழுத்து சுழற்றிக்கொள்ளுதல், இறக்கைகள் மற்றும் கால்கள் செயலிழத்தல்
** கொண்டை நீல நிறமாக மாறுதல்
** முக வீக்கம்
** கழிச்சல்
** முட்டை உற்பத்தி குறைதல்
** திடீரென ஏற்படும் இறப்பு
நோய்த் தடுப்பு முறைகள்
** தடுப்பூசி போடுவது, முறையான மேலாண்மை, உயிர்ப்பாதுகாப்பு முறைகள் மூலம் நோய் வருவதைத் தடுக்கலாம்.
** இலசோட்டா, எஃப், பி 1 போன்ற லென்டோஜெனிக் வைரஸ் தடுப்பூசிகள், மீசோஜெனிக் தடுப்பூசிகளான எச், ஆர் 2 பி, முக்தேஷ்வர் போன்றவற்றை பயன்படுத்தி கோழிகளில் ராணிக்கெட் நோய்க்கெதிராக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
** ஆரோக்கியமான கோழிக்குஞ்சுகளை அவற்றின் முதல் 1-4 நாள் வயதில் இந்நோய்க்கு எதிராகத் தடுப்பூசி அளித்து நோய் வராமல் தடுக்கலாம்.
** லென்டோஜெனிக் தடுப்பூசியினை கண் வழியாகவோ அல்லது மூக்கு வழியாகவோ முதல் தடுப்பூசியாக அளிக்கலாம்.
** மீசோஜெனிக் தடுப்பூசிகள் தோலுக்கடியிலோ அல்லது சதை வழியாகவோ 6-8 வார வயதில் இரண்டாம் தடுப்பூசியாகக் கொடுப்பதால் கோழிகள் நீண்ட காலத்திற்கு இந்நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தியைப் பெறுகின்றன.
** செயலிழக்கப்பட்ட ராணிக்கெட் நோய் ஏற்படுத்தும் வைரஸ் உடன் எண்ணெய் கலந்த ரசாயனத்தைச் சேர்த்து நோய்த்தாக்குதல் அதிகமுள்ள பகுதிகளில் கோழிகளுக்கு தோலுக்கடியிலோ அல்லது சதை வழியாகவோ கொடுக்கும் போது நீண்ட நாட்களுக்கு இந்நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தி அவற்றின் உடலில் இருக்கும்.