கோழிகளுக்கு ஏற்ற தட்ப வெப்பநிலையை கொடுக்க இத்தனை வழிகள் இருக்கு…

 |  First Published Nov 4, 2017, 12:06 PM IST
make chicken warm in this method



 

கோழிக் கொட்டகையினை சூடாக்கும் ஆதாரம் மின்சாரம் அல்லது இயற்கை எரிவாயு அல்லது எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற திரவ எரிபொருள்கள் அல்லது திட எரி பொருட்களான கரி, விறகு போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

Tap to resize

Latest Videos

மின்சாரம் மூலம் இயங்கும் வெப்ப ஆதாரம்:

இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூடாக்கும் ஆதாரமாகும். இந்த இயந்திரம் தேவைப்படும் அளவு வெப்பத்தை ஒரு பெரிய இடத்தில் சீராகப் பரப்பும் தன்மையுடையது. இவ்வாறு வெப்பத்தை சீராகப் பரப்புவதால் கோழிக்குஞ்சுகள் வெப்ப ஆதாரத்திற்கு அருகில் கூட்டமாக இருப்பது தடுக்கப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் வெப்ப ஆதாரம் ஒன்றின் மூலம் சாதாரணமாக 300-400 குஞ்சுகளைப் பராமரிக்கலாம்.

அகச்சிவப்பு கதிர் வெளியிடும் பல்புகள்:

இது ஒரு தானாக வெப்பத்தை எதிரொளிக்கும் அமைப்பாகும். 250 வாட்ஸ்கள் உள்ள அகச்சிவப்பு கதிர் பல்பு மூலம் 150-250 கோழிக் குஞ்சுகளுக்கு வெப்பத்தை அளிக்கலாம்.

வாயு மூலம் இயங்கும் வெப்ப ஆதாரம்:

இயற்கை எரி வாயு அல்லது எல்பிஜி அல்லது மீத்தேன் வாயு மூலம் இணைக்கப்பட்ட சூடாக்கும் கம்பியினை தரையிலிருந்து 3-5 அடி உயரத்தில் கொட்டகையில் தொங்க விட்டு குஞ்சுகளுக்கு வெப்பத்தை அளிக்கும் வகையில் செய்யலாம்.

கரி அடுப்பு அல்லது மண்ணெண்ணெய் அடுப்பு:

மின்சாரம் இல்லாத பகுதிகளில் சாதாரண கரி அல்லது மண்ணெண்ணெய் போன்றவற்றை உபயோகித்து குஞ்சுகளுக்கு செயற்கையாக வெப்பத்தை அளிக்கலாம். இந்த அடுப்புகளின் மீது தட்டு அல்லது பாத்திரங்களை வைத்து மூடி அவற்றிலிருந்து வெப்பம் கொட்டகையில் வெளியேறுமாறு செய்யலாம்.

எதிரொளிப்பான்கள்:

இந்த எதிரொளிப்பான்கள் ஹோவர்கள் என்று அழைக்கப்படுகின்றன. தட்டையாக இருக்கும் ஹோவர்களில் சூடாக்கும் பகுதி, சூடான பல்பு, வெப்பமானி போன்ற அம்சங்கள் இருக்கும். கேனோப்பி ஹோவர்கள் குழி போன்ற அமைப்புடன், சாதாரண மின்சார பல்புகளுடன், வெப்பநிலையினைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளுடன் இருக்கும்.

குஞ்சுகளைப் பாதுகாக்கும் அமைப்பு

கோழிக் குஞ்சுகள் வெப்ப ஆதாரத்தை விட்டு தூரமாகச் செல்வதை இந்தப் பாதுகாப்பு அமைப்புகள் தடுக்கின்றன. இந்த அமைப்பானது 5 அடி அகலத்துடன், 1.5 அடி உயரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. இதற்காக கால நிலைக்கேற்றவாறு காகிதத்தாலான அட்டைகள் அல்லது துருப்பிடிக்காத இரும்பு அட்டைகள், கம்பி வலைகள் அல்லது பாய்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. குளிர்காலத்தில் 5-6 நாட்களும், வெயில் காலத்தில் 2-3 வாரங்களும் குஞ்சுகள் இவ்வாறு பராமரிக்கப்படுகின்றன.

click me!