கோழிக்குஞ்சுகளை வளர்க்கும் கலைக்கு புரூடிங் என்று ஆங்கிலத்தில் பெயராகும். புதிதாக பொரிக்கப்பட்ட கோழிக் குஞ்சுகளுக்கு அவற்றின் உடல் வெப்பநிலையினை சீராக வைத்திருக்க முடியாது.
சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கோழிக்குஞ்சுகள் தயாரவதற்கு இரண்டு வாரங்களாகும். எனவே அவற்றின் முதல் சில வார கால வயதில் அவற்றால் தங்களுடைய உடல் வெப்பநிலையினை சீராக வைத்திருக்க முடியாது.
undefined
இந்த சூழ்நிலையில் கோழிக்குஞ்சுகளை குளிரான சூழ்நிலைக்கு உட்படுத்தினாலோ அல்லது கவனிப்பு குறைவாக இருந்தாலோ அவற்றின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விடும்.
கோழிக்குஞ்சு பராமரிப்பில் இரு முறைகள் உள்ளன
1.. இயற்கையான முறையில் பராமரித்தல்
2.. செயற்கை முறையில் பராமரித்தல்
இயற்கையான முறையில் பராமரித்தல்
இம்முறையில் தாய்க்கோழியே அவற்றின் குஞ்சுகளை 3-4 வார வயது வரை பாதுகாக்கும்.
செயற்கை முறையில் பராமரித்தல்
இம்முறையில் அதிக எண்ணிக்கையிலான கோழிக் குஞ்சுகள் தாய்க்கோழியின் உதவியின்றி வளர்க்கப்படுகின்றன.