1.. கோழிக் குஞ்சுகளுக்கான கூண்டுகள்
2.. வளரும் கோழிகளுக்கான கூண்டுகள்
3.. இனப்பெருக்கத்திற்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கான கூண்டுகள்
4.. கறிக்கோழிகளுக்கான கூண்டுகள்
1.. கோழிக் குஞ்சுகளுக்கான கூண்டுகள்
முன்னால் உள்ள தீவனமளிக்கும் பகுதி நீளம் : 60 அடி
முன் மற்றும் பின் உயரம் 12 அடி
ஆழம் – 36 அடி
கோழிக் குஞ்சுகளுக்கான கூண்டுகள் ஒரே வரிசையில் தட்டையாக ஒற்றை அடுக்கு அல்லது இரண்டு அடுக்குகளாக அமைக்கப்படவேண்டும்.
தீவனமளிக்கும் மற்றும் தண்ணீர் அளிக்கும் பகுதிகள் கூண்டுகளுக்கு வெளியே அமைக்கப்பட வேண்டும்.
தற்போது ஒரு நாள் வயதடைந்த குஞ்சுகளுக்குக் கூட நிப்பிள் முறை மூலம் தண்ணீர் அளிப்பது பின்பற்றப்படுகிறது.
கூண்டுகளின் தரையில் முதல் 1-10 நாட்களுக்கு பழைய செய்தித்தாள்களை பரப்பி வைக்க வேண்டும்.
முதல் வார வயதில் மட்டும் கோழிக்குஞ்சுகளுக்கு தீவனத்தை கூண்டுகளின் உள்ளேயே அளிக்கவேண்டும்.
2.. வளரும் கோழிகளுக்கான கூண்டுகள்
முன்னால் உள்ள தீவனமளிக்கும் பகுதியின் நீளம் – 30 அடி
முன் மற்றும் பின்பக்க உயரம் : 15 அடி
ஆழம் – 18 அடி
ஒரு கூண்டில் வளர்க்கப்படவேண்டிய 8-10 வார வயதிலான கோழிகளின் எண்ணிக்கை – 10
3.. முட்டையிடும் கோழிகளுக்கான கூண்டுகள்
இரண்டு விதமான முட்டையிடும் கோழிகளுக்கான கூண்டுகள் திறந்த வெளி கோழிப் பண்ணைகளில் அமைக்கப்படுகின்றன.
1.. எப்பொழுதும் அமைக்கக்கூடிய கூண்டுகள்
2.. ரிவர்ஸ் கூண்டுகள்
1.. எப்போதும் அமைக்கக்கூடிய கூண்டுகள்
முன்புறமுள்ள தீவனமளிக்கும் பகுதியின் நீளம் – 15 அடி
முன்புற உயரம் – 18 அடி
பின்புற உயரம் – 15 அடி
ஆழம் – 18 அடி
2.. ரிவர்ஸ் கூண்டுகள்
முன்புறமுள்ள தீவனமளிக்கும் பகுதியின் நீளம் – 18 அடி
முன்புற உயரம் – 18 அடி
பின்புற உயரம் – 15 அடி
ஆழம் – 15 அடி
இந்தக் கூண்டுகளில் 3 முதல் நான்கு கோழிகளை வளர்க்கலாம். இக்கூண்டுகள் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக வளர்க்கலாம்.
இவ்வாறு அடுக்குகளாக அமைக்கும்போது அவை 1/6 அடி சரிவாக எப்போது அமைக்கப்படும் கூண்டுகளிலும், ரிவர்ஸ் கூண்டுகளில் 1/5 சரிவாகவும் இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும்.