இந்த முறையில் கோழிகள் கம்பிகளால் அமைக்கப்பட்ட சிறிய கூண்டுகளில் வளர்க்கப்படுகின்றன. இந்த கூண்டுகள் கொட்டகையின் தரையிலிருந்து கம்பிகள் போன்ற தாங்கிகள் அமைக்கப்பட்டு அவற்றின் மீதோ அல்லது கூரையிலிருந்து நேரடியாக தொங்குமாறோ அமைக்கப்படுகின்றன.
இந்த முறை கோழிகளை குஞ்சுப்பருவத்திலிருந்து அவற்றை பண்ணையிலிருந்து நீக்கும் வரை வளர்க்க ஒரு சிறந்த முறையாகும். உலகிலுள்ள வணிக ரீதியாக வளர்க்கப்படும் 75% முட்டைக்கோழிகள் இம்முறை மூலமே வளர்க்கப்படுகின்றன.
undefined
தீவன மற்றும் தண்ணீர் உள்ள தொட்டிகள் போன்ற அமைப்புகள் கூண்டுகளின் வெளிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் நிப்பிள் எனப்படும் தண்ணீர் அளிக்கும் உபகரணம் மட்டும் கோழிகள் அவற்றிலிருந்து நேரடியாகத் தண்ணீர் குடிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன.
தானியங்கி தீவனத்தொட்டிகளும், முட்டை சேகரிக்கும் உபகரணங்களும் கூட கூண்டுகளுடன் இணைக்கப்பட்டு சில நேரங்களில் அமைக்கப்படுகின்றன.
நன்மைகள்
** கோழிகளுக்கு குறைவான இடவசதியே தேவைப்படும்.
** ஒரு கோழியிலிருந்து அதிகப்படியான முட்டைகள் பெறலாம்.
** குறைந்த தீவன சேதாரம்
** தீவன மாற்றுத்திறன் சிறப்பாக இருத்தல்
** அக ஒட்டுண்ணிகள் மற்றும் மண் மூலம் பரவும் நோய்களிலிருந்து பாதுகாப்பு
** சுத்தமான முட்டை உற்பத்தி
** முட்டைகளைக் குடித்தல், கோழிகள் ஒன்றுடன் ஒன்று கொத்திக்கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் குறைவு
** நோயுற்ற மற்றும் உற்பத்தி செய்யாத கோழிகளை கண்டறிந்து உடனே பண்ணையிலிருந்து நீக்கிவிடுவது எளிது.
** கோழிகளின் அடைகாக்கும் குணநலன் குறைதல்
** ஆழ்கூளம் தேவைப்படாமை
** செயற்கை முறை கருவூட்டல் செய்வதும் சுலபம் அல்லது செயற்கை முறை கருவூட்டலைப் பின்பற்றலாம்.