இந்த முறையில் அடை வைக்க முட்டைகளை உற்பத்தி செய்யப் பயன்படும் கோழிகள், குறிப்பாக இறைச்சிக்கோழிகளை உற்பத்தி செய்யப் பயன்படும் இனப்பெருக்கக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இந்த கொட்டகை அமைப்பில் தரையின் ஒரு பகுதி சாய்வாக அமைக்கப்படுகிறது. பொதுவாக 60% தரை சாய்வாகவும், மீதம் உள்ள தரையில் ஆழ்கூளம் இடப்படுகிறது.
தீவனத்தொட்டிகள் மற்றும் தண்ணீர்த் தொட்டிகள் சாய்வான தரை உள்ள பகுதிகளிலும், ஆழ்கூளம் உள்ள பகுதிகளிலும் அமைக்கப்படுகிறது. இனப்பெருக்கத்திற்கு பயன்படும் கோழிகளை வளர்க்கும்போது அவைகள் முட்டையிட பெட்டிகளும் வைக்கப்படுகின்றன.
நன்மைகள்
** கடினமான தரை அமைப்பில் உற்பத்தி செய்வதை விட இந்த ஒரு குறிப்பிட்ட தரை அளவில் அதிகப்படியான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது.
** சாய்வான தரை மட்டும் இருக்கும் கொட்டகைகளில் இருந்து கிடைக்கும் முட்டைகளை விட இந்த தரை அமைப்பில் வளர்க்கப்படும் கோழிகளிலிருந்து கிடைக்கும் முட்டைகளின் குஞ்சு பொரிப்புத் திறன் அதிகம்.
தீமைகள்
** இந்த முறை தரை அமைப்பை அமைக்க மற்ற தரை அமைப்புகளை அமைப்பதை விட அதிகப்படியாக செலவாகும்.
** ஈக்களின் தாக்குதலால் ஏற்படும் தொல்லைகள் மிகவும் அதிகம்.