கோழிகளின் எச்சமும், ஆழ்கூளமும் சேர்ந்து மக்கி உரமாக மாறுகிறது. இதன் அளவு கோழிக்கொட்டகையில் 8-12 இஞ்ச் உயரத்தை அதன் உண்மையான அளவான 3-5 இஞ்சிலிருந்து அதிகரிக்கும்.
undefined
ஆழ்கூளத்தின் மீது பாக்டீரியாக்களின் செயல்பாடு காரணமாக அவை மக்கி, வெப்பம் உற்பத்தியாகி ஆழ்கூளத்தை வெதுவெதுப்பாகவும், உலர்வாகவும் வைக்கிறது. கோழிகளின் எச்சம் கொட்டகையில் இடப்பட்ட ஆழ்கூளத்தின் அளவை விட அதிகரிக்கும்போது புதிதாக ஆழ்கூளத்தை சேர்ப்பதால் அதிலுள்ள எச்சத்தின் அளவைக் குறைக்க முடியும்.
கோழிக் கொட்டகையிலுள்ள ஆழ்கூளத்தை அடிக்கடி கிளறி விடுவதால் பாக்டீரியாக்களின் செயல்பாடு அதிகரித்து, ஆழ்கூளம் நன்றாக மக்கும். ஒரு வருடம் கழித்து ஆழ்கூளத்தை மாற்றி, மக்கிய ஆழ்கூளத்தை நல்ல உரமாக உபயோகிக்கலாம்.
நன்றாக உருவான ஆழ்கூளம் மற்றும் கோழி எச்சம் கலந்த உலர்வாகவும்,உடையக்கூடியதாகவும், விரும்பத்தகாத வாசனைகள் அற்றதாவும் இருக்கும்.
சாய்வான தரை
இந்த வகை தரை அமைப்பில் இரும்பு உருளைகள், அல்லது மர ரீப்பர்கள் தரையினை அமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தரையிலிருந்து 2-3 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு, அவற்றுக்கிடையிலுள்ள ஓட்டைகளின் வழியாக கோழிகளின் எச்சம் கீழே விழுந்துவிடும்.
மர ரீப்பர்களும், இரும்பு உருளைகளும் 2 இஞ்ச் அளவு விட்டம் உடையதாக ஒவ்வொரு உருளைகளுக்கும் இடையில் ஒரு இஞ்ச் இடைவெளியும் இருக்கவேண்டும்.
இந்த முறையில் இருக்கும் நன்மைகள்
** கடினமான தரை அமைப்பினை விட இதற்கு குறைவான இட வசதியே தேவைப்படும்.
** கோழிகளுக்கு ஆழ்கூளமாகப் பயன்படுத்தப்படும் படுக்கைப் பொருட்கள் குறைந்த அளவே தேவைப்படும்.
** கோழிகளின் எச்சத்தை கையால் எடுத்துக் கையாள்வது தடுக்கப்படுகிறது.
** சுகாதாரமானது
** வேலையாட்களின் அளவைக் குறைக்கிறது.
** மண் மூலம் ஏற்படும் நோய்களின் தாக்கம் குறைவு
இந்த முறையில் இருக்கும் தீமைகள்
** எப்போதும் அமைக்கப்படும் கடினமான தரை அமைப்புகளை விட அதிக முதலீடு தேவை.
** ஒரு முறை வடிவமைத்த பிறகு மீண்டும் மாற்றி அமைக்கும் வாய்ப்பு குறைவு
** சிந்தப்பட்ட தீவனம், உருளைகளுக்கு இடையிலுள்ள ஓட்டைகள் வழியாக கீழே விழுந்துவிடும்.
** ஈக்களின் தொல்லை அதிகம்.