பூச்சி கொல்லியை நிலத்திற்கு எப்படி தெளிக்கணும்னு இதை வாசிங்க தெரியும்.. 

First Published Jun 22, 2018, 4:07 PM IST
Highlights
Learn how to spray the pesticides to the ground


** பூச்சிக்கொல்லி தெளிக்கும் இடத்துக்கு அருகில் சுத்தமான நீர், சோப்புக்கட்டி, துண்டு ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உடலிலோ, கைகளிலோ பூச்சிக்கொல்லி பட்டுவிட்டால் உடனே சுத்தம் செய்துகொள்ள முடியும்.

** குழந்தைகள், முதியவர்கள், கருவுற்ற தாய்மார்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் பூச்சிக்கொல்லிகளை கையாளக்கூடாது. 

** பூச்சிக்கொல்லி தெளிப்பவர் பாதுகாப்பான உடைகளான முழுநீளச் சட்டை, நீண்ட கால்சட்டை, கால்களுக்கு தரமான பூட்ஸ் காலணிகள், தலைக்குத் தொப்பி அல்லது முண்டாசு, கண்களுக்கு வெள்ளைநிற கண்ணாடி, கைகளுக்கு பாதுகாப்பு ரப்பர் உறைகளையும், வாய்க்கு அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் முகமூடிகளையும் பயன்படுத்த வேண்டும்.

** பூச்சிக்கொல்லி அடித்து முடித்தவுடன் சோப்பு போட்டுக் குளித்து ஆடைகளை மாற்றிக்கொள்ள வணே்டும். கழற்றிய ஆடைகளை சலவை செய்யாமல் மறுபடியும் உடுத்தக் கூடாது. 

** இந்த ஆடைகளை அன்றாடம் பயன்படுத்தும் ஆடைகளுடன் சேர்த்து சலவை செய்யக் கூடாது. 

** பூச்சிக்கொல்லி தெளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உணவு அருந்துவதோ, குடிநீர் குடிக்கவோ, புகைப்பிடிப்பதோ கூடாது.

** எப்பொழுதுமே பூச்சிக்கொல்லியைக் கலக்கும்பொழுது காற்று வீசும் திசையில் நின்றே கலக்க வேண்டும். 

** கொள்கலனை முகர்ந்து பார்க்கக் கூடாது. காலை, மாலை வேளைகளில் மட்டுமே பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும். 

** வெயில் அதிகமாக இருக்கும்போது பூச்சிக்கொல்லி தெளிக்கக் கூடாது.

click me!