** பூச்சிக்கொல்லிகளை தேவைப்படும் அளவு மட்டுமே வாங்க வேண்டும்.
** உடைந்த, ஒழுகிய, காலாவதியான, மூடி திறந்த பூச்சிக்கொல்லி பாட்டில்களை வாங்கக் கூடாது.
** பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் நீர்நிலைகள், ஆறு, குளங்களுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி பூச்சிக்கொல்லி டப்பாக்களிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.. அதனால், நீர்நிலைகளில் இந்த பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கக் கூடாது.
** பூச்சிக்கொல்லி பாட்டில் லேபிளில் எச்சரிக்கை, ஆபத்து, விஷம் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கும்.
** விஷம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பூச்சிக்கொல்லிகள் பெரும் ஊறு விளைவிப்பவை.
** இந்த வகையான பூச்சிக்கொல்லிகளை கூடுதல் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். மற்றவை அதிக நச்சுத்தன்மை, சுமாரான நச்சுத்தன்மை, மிகக் குறைந்த நச்சுத்தன்மை கொண்டவை.
** பூச்சிக்கொல்லி தெளிப்பவர், குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
** பூச்சிக்கொல்லி தெளிக்கப் பயிற்சி பெற்ற ஆட்களையே பயன்படுத்த வேண்டும்.
** பூச்சிக்கொல்லி தெளிக்கும் தெளிப்பான்களைப் பரிசோதனைசெய்து கசிவுகள் இருந்தால் சரிசெய்துகொள்ள வேண்டும்.