கோழிகளை  தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தும் இந்த நோயை பற்றி தெரிஞ்சுக்குங்க...

 |  First Published Nov 23, 2017, 12:39 PM IST
Learn about the disease that can cause serious damage to chickens ...



அஸ்காரியாசிஸ்

நோயின் தன்மை

இந்நோயில் கோழிகளுக்கு கழிச்சல், இரத்த சோகை, எடை குறைதல், இறப்பு விகிதம் அதிகரித்தல், முட்டை உற்பத்திக் குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

நோய்க்கான காரணங்கள்

அஸ்காரடியா காலி எனும் உருளைப்புழு கோழிகளின் குடலில் ஒட்டுண்ணியாக இருந்து பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

அஸ்கார்டியா வகையினைச் சார்ந்த புழுக்கள் பறவைகளைத் தாக்கும் பெரிய உருளைப்புழுக்களாகும்.

சத்துக்குறைபாடுடைய கோழிகளை இந்தப் புழுக்கள் பொதுவாக பாதிக்கின்றன.

ஆழ்கூளத்தைத் திரும்பத்திரும்ப கறிக்கோழிகள் வளர்ப்பதற்கு உபயோகப்படுத்தும் போது இந்த புழுக்களின் தாக்கம் கோழிகளில் தீவிரமாக ஏற்படுகிறது.

வைட்டமின் ஏ, பி மற்றும் பி12, பல்வேறு தாது உப்புகள், புரதம் போன்றவற்றின் குறைபாட்டால் இந்தப் புழுக்களின் தாக்கம் கோழிகளில் தீவிரமாக ஏற்படுகிறது.

அஸ்கார்டியா காலி புழுக்களின் முட்டைகளை உட்கொண்ட வெட்டுக்கிளிகள், மண்புழுக்கள், போன்றவற்றைக் கோழிகள் உட்கொண்டால் அவற்றுக்கு இந்தப் புழுக்களின் தொற்று ஏற்படுகிறது.

போதுமான வெப்பநிலை, ஈரப்பதம், இருக்கும் போது முட்டைகள் சுற்றுப்புறத்தில் 10-12 நாட்கள் உயிரோடு இருக்கும்.

இந்தப் புழுக்களின் முட்டைகள் குறைந்த வெப்பநிலைக்கு எதிர்ப்புத் திறன் பெற்றவை.

மூன்று மாத வயதிற்கு மேல் உள்ள கோழிகள் இந்தப் புழுக்களின் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தியினைப் பெற்றிருக்கின்றன.

நோயின் அறிகுறிகள் 

இப்புழுக்களின் தாக்குதலால் உடல் வளர்ச்சிக் குன்றி, எடை குறைவாகவும் இருக்கும்.

இப்புழுக்களால் பாதிக்கப்பட்ட கோழிகளில் இரத்தசோகை, கழிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

அதிகப்படியாக கோழிகளில் புழுக்களின் தாக்கம் ஏற்படும் போது இரத்தக்கழிச்சல் கோழிகளுக்கு ஏற்படும்.

அதிகப்படியாக கோழிகளில் புழுக்களின் தாக்கம் ஏற்படும் போது இரத்தக்கழிச்சல் கோழிகளுக்கு ஏற்படும்.

பாதிக்கப்பட்ட கோழிகள், உடல் மெலிந்து, முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் ஏற்படும் நோய் அறிகுறிகள்

நூல் போன்ற புழுக்கள் பாதிக்கப்பட்ட கோழிகளின் குடலில் அடைத்துக் கொண்டிருக்கும்.

அஸ்கார்டியா புழுக்கள் சில சமயங்களில் பாதிக்கப்பட்ட கோழிகளின் முட்டைகளில் கூட சில சமயம் இருக்கும். கேண்டிலிங் முறை மூலம் புழுக்கள் உள்ள முட்டைகளைக் கண்டறியலாம்.  

நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்

கோழிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பைப்பரசின் எனும் குடற்புழு நீக்க மருந்தினைப் பயன்படுத்தி குடற்புழுக்களை நீக்க வேண்டும்.

வயது குறைவான கோழிகளை, வயதான கோழிகளிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும்.

ஆழ்கூளத்தைத் திரும்பத் திரும்ப உபயோகிப்பதைத் தடுக்கவேண்டும்.

ஆழ்கூளத்தைஅடிக்கடி மாற்றுவதால் கோழிகளில் இப்புழுக்களின் தாக்குதல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மண், ஆழ்கூளம் போன்றவற்றை முறையாகக் கையாளுவதால்புழுக்களின் இடைநிலைத் தாங்கிகளை அவற்றிலிருந்து நீக்கம் செய்வதற்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

தகுந்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி ஆழ்கூளத்திலுள்ள புழுக்களை அழிக்கலாம்.

ஆழ்கூளத்தை எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

தீவனம் மற்றும் தண்ணீர் இந்த புழுக்களின் முட்டைகளால் அசுத்தமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சுத்தமான தீவனத் தட்டுகள், மற்றும் தண்ணீர்த் தட்டுகளையே எப்போதும் உபயோகிக்க வேண்டும்.

கோழிக் கொட்டகைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

click me!