இயற்கை விவசாய முறையில் வெண்டை சாகுபடி செய்தால் பலன் அதிகமாக கொடுக்கும்.

 |  First Published Jun 12, 2018, 2:57 PM IST
ladies finger cultivation methods



வெண்டை சாகுபடி

வெண்டை ஒரு குறுகிய கால காய்கறி பயிர். 

Latest Videos

undefined

பட்டம் இல்லாத பயிர் அதனால் எந்த பட்டத்தில் வேண்டுமானாலும் பயிர் செய்யலாம்.

வெண்டையில் கோவை வேளாண் கல்லூரி வெளியிட்டுள்ள புதிய CO-4 ரகம் மிகவும் பிரபலம்.

வெண்டை நடவு செய்ய நிலத்தை நன்கு உழுது அடி உரமாக 1 ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட வேண்டும்.  

பார்க்கு பார் ஒன்றரை அடி செடிக்கு செடி ஒரு அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். வெண்டை விதைத்த ஒரு வாரத்தில் முளைக்க ஆரம்பிக்கும்.

வெண்டைக்கு நட்ட 15 வது நாள் ஒரு களை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், களைகள் அதிகம் இருந்தால் இரண்டாவது களை எடுக்கலாம்.

உயிர் உரங்கள் தலா ஒரு லிட்டர், அதாவது அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, potash பாக்டிரியா, zinc பாக்டீரியா, V A M 5kg powder + ஒரு kg வெல்லம் 100 kg தொழு உரத்தில் கலந்து மூன்று நாள் ஈரச்சாக்கு போர்த்திவைத்து பின்பு, விதை விதைத்து நீர் பாய்ச்சிய மூன்றாம் நாள் இட வேண்டும். வேப்பம் பிண்ணாக்கு ஏக்கருக்கு 100 kg இட வேண்டும்.

கற்பூரகரைசல் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து தெளிப்பதனால் பூச்சி தாக்குதல்களை முற்றிலும் தவிர்க்கலாம். 

வெண்டைக்கு வாரம் ஒரு முறை  மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் பாசன நீரில் கலந்துவிட்டால் நீளமான மற்றும் அதிக காய்கள் கிடைக்கும். இரண்டு மாதம் அதன் வாழ்நாள் கூடும்.

வெண்டை பூ பூக்க ஆரம்பிக்கும் போது தேங்காய் பால் கரைசல் வாரம் ஒரு முறை தெளிக்கலாம். அதனால் நீண்ட கவர்ச்சியான வாளிப்பான  காயகளை பெறலாம்.

மஞசள் வண்ணம் பூசிய அட்டைகள் கிரீஸ் தடவி வைப்பதன் மூலம் வெண்டையில் பச்சை மற்றும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். வெண்டை நட்ட 40 வது நாள் முதல் காய்பறிக்கலாம். 

click me!