சப்போட்டா பழங்களை பழுக்க வைக்கும் சூப்பர் டெக்னிக்...

 |  First Published Jun 11, 2018, 11:50 AM IST
Super Technique that dissolves sapota fruit ...




** பூத்ததிலிருந்து 4-5 மாதங்களில் அறுவடைக்கு வரும் சப்போட்டாவின் காய்கள் முதிர்ச்சி அடைந்ததை அறிந்து கொள்ள தோலில் எந்த மாற்றங்களும் ஏற்படுவதில்லை.

** முதிர்ச்சி அடைந்த காய்கள் ஓரிரு மாற்றங்களைக் கொண்டு முதிர்ச்சி அடைந்த நிலை எனக் கண்டறிந்து பறிக்கப்படுவது பழக்கத்தில் உள்ளது.

** சப்போட்டா பறித்தவுடன் பழமாக உண்ணும் நிலையில் இருப்பதில்லை.

** காலை நேரத்தில் சப்போட்டா காய்களில் அதிகமாகப் பால் இருப்பதால் (Latex) பிற்பகலில் பறித்து பழுக்க வைப்பது சிறந்தது.

** பறித்தவுடன் காய்களின் காம்பிலிருந்து பால் வடியும்.

** காய்களை அதிகப்பாலுடன் பழுக்க வைத்தால் சரிவர பழுக்காமல் சேதமேற்படும். ஆகவே பறித்த காய்களை சாக்குபடுக்கையின் மேல் பரப்பி இளம் வெயிலில் அரைமணி நேரம் வைத்தால் காய்களில் உள்ள பால் குறைந்து விடும்.

** சிறிதளவு காயவைத்த காய்களை வைக்கோல் பரப்பிய மூங்கில் கூடைகளில் அடுக்கி கூடையின் மேல் பகுதியை மூங்கில்தட்டி அல்லது சாக்குப்பை பயன்படுத்தி இருக்கமாக மூடிவிடவேண்டும்.

** கூடையிலுள்ள காய்கள் 3-4 தினங்களில் பழுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடிய பழமாக இருக்கும் சப்போட்டா பழுத்தபின் ஓரிரு நாட்களே உண்பதற்கான நிலையில் இருக்கும். பிறகு சுவை குன்றி அழுகி விடும். 

** பழுத்த பழங்களை குளிர்சாதனை அறைகளில் 0 டிகிரி சென்டி கிரேடு முதல் 1.7 டிகிரி உள்ள சீதோஷ்ண நிலையில் 2 முதல் 4 வாரம் வரை நல்ல முறையில் வைத்திருந்து விற்பனை செய்ய முடியும்.

click me!