கொத்தவரைக்காய் சாகுபடி: ரகங்கள் முதல் மகசூல் வரை ஒரு பார்வை…

Asianet News Tamil  
Published : Mar 24, 2017, 12:08 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
கொத்தவரைக்காய் சாகுபடி: ரகங்கள் முதல் மகசூல் வரை ஒரு பார்வை…

சுருக்கம்

Kottavaraikkay cultivation first yield varieties with a view to

ரகங்கள்:

பூசா சதபாகர், பூசா மவுசாமி, பூசா நவுபகார் மற்றும் கோமா மஞ்சரி

மண்: 

நல்ல வடிகால் வசதியுடைய மணற்பாங்கான (அ) வண்டல் மண்ணின் காரத்தன்மை 7.5-8.0 வரை இருத்தல்வேண்டும். உவர்ப்பு நிலங்களில் வளரும் தன்மையுடையது.

விதைப்பு மற்றும் பருவம்:

ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பர் விதைகளை பார்களின் பக்கவாட்டில் 15 செ.மீ இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

விதையளவு

ஒரு எக்டருக்கு 10 கிலோ விதை

விதை நேர்த்தி

ஆறிய அரிசி கஞ்சியில் 600 கிராம் ரைசோபியம் நுண்ணுயிர் கலவைக் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். விதைக்கும் முன்னர் 15 - 30 நிமிடம் நிழலில் உலர்த்த வேண்டும்.

நிலம் தயாரித்தல்:

நிலத்தை நன்கு உழுது பண்பட செய்ய வேண்டும். பின் பார் சால்களை 45 செ.மீ இடைவெளியில் அமைக்க வேண்டும்.

ஊட்டச்சத்து நிர்வாகம்:

கடைசி உழவின் போது ஒரு எக்டருக்கு மக்கிய தொழு உரம் 25 டன், அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபேக்டீரியா 2 கிலோ, தழைச்சத்து 50 கிலோ, மணிச்சத்து 50 கிலோ மற்றும் சாம்பல் சத்து 25 கிலோ அடியுரமாக இடவேண்டும்.

நடவு செய்த 30-வது நாளில் ஒரு எக்டருக்கு 20 கிலோ தழைச் சத்தினை மேலுரமாக இடவேண்டும்.

பயிர்ப்பாதுகாப்பு:

1.. இலை தத்துப்பூச்சி

மீத்தைல் டெமட்டான் 25 இசி 1 மில்லி (அ) டைமெத்தோயேட் 30 இசி 1 மிலி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

2.. காய்ப்புழு

காரரைல் 2 கிராம் (அ) என்டோசல்பான் 2 மிலி என்ற அளவில் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய்

இலைப்புள்ளி நோய்

மேங்கோசிப் 2 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

சாம்பல் நோய்

15 நாட்களுக்கொருமுறை நனையும் கந்தகத் தூள் 2 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்த தெளிக்க வேண்டும்.

மகசூல்:

விதைத்த 90-வது நாளில் 7 – 10 டன் மகசூல் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!