வாழை பயிருடன் ஊடு பயிராக கொத்தவரக்காய் சாகுபடி செய்யலாம்.
கிணற்றுப் பாசனத்தில், அதிகளவு வாழை, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
பத்து மாதப் பயிரான வாழையில் ஊடு பயிராக விவசாயிகள் கொத்தவரக்காய் பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
கொத்தவரங்காயை 90 நாள் பயிர். அதனை ஊடுபயிராக அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்வது வரவேற்கத்தக்கது.
விதை நடவு செய்த 30-வது நாளிலிருந்து காய்ப்பு பருவத்துக்கு வர 70 முதல் 90 நாள் வரை ஆகும். இந்த நேரத்தில், ஒரு ஏக்கரில் வாரத்துக்கு 80 முதல் 100 கிலோ வீதம் காய் உற்பத்தியாகும். உபரியாக கொத்தவரக்காய் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
இது தவிர விவசாயிகள் சிறிய வெங்காயம், கத்தரி போன்ற பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இருப்பினும், விவசாய தொழிலாளர்களின் கூலி உயர்வால், களை எடுப்பது முதல் அறுவடை வரை அதிக பணம் செலவாவதால், விவசாயிகள் போதிய லாபம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் கொத்தவரக்காய் ஊடுபயிராக பயிரிட்டால் கிடைக்கும் வருமானத்தை கொண்டு ஓரளவுக்குச் சமாளிக்கலாம்.