பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:
அந்துப்பூச்சி
பயறு வகைப் பயிர்களைத் தாக்கக்கூடிய முக்கியமான பூச்சிகளில் ஒன்று.
கொத்தவரையைத் தவிர தக்காளி, பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, மொச்சை, அவரை, மிளகாய், சோயா மொச்சை போன்ற பல்வேறு பயிர்களையும் தாக்கக் கூடியது.
புழுக்கள் காய்களைத் துளைத்து, உள்ளிருக்கும் விதைகளை உண்டு அதிக சேதம் விளைவிக்கக் கூடியவை.
புழுவின் தலையும் உடலின் முன்பகுதியும் மட்டுமே காய்களுக்குள் செல்லும். மத்தியப்பகுதி காயின் வெளியே காணப்படும்.
ஒரு புழு பல காய்களைத் தாக்கும். காய்கள் உண்டாவதற்கு முன் புழுக்கள் செடிகளின் குருத்துப் பகுதிகளையும் இலைகளையும் கடித்து அழித்துவிடும்.
பூச்சி கட்டுப்பாடு முறைகள்:
1.. கொத்தவரை அறுவடைக்குப் பின் உடனடியாக செடிகளை அப்புறப்படுத்தி விட வேண்டும்.
2.. வயலை நன்றாக உழுது மண்ணுக்கடியில் இருக்கும் கூண்டுப்புழுவை அழிக்கலாம்.
3.. புழுக்களால் தாக்கப்பட்ட காய்களைப் பறித்து அழித்துவிட வேண்டும்.
4.. வயலில் காணப்படும் பெரிய புழுக்களை கையால் சேகரித்து அழிக்க வேண்டும்.
5.. விளக்குப்பொறி வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
6.. இனக்கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 5 வீதம் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.