ஜே-13 நெல் ரகம்: எல்லா பட்டங்களிலும் சாகுபடி செய்து லாபம் அள்ளலாம்…

 |  First Published Apr 13, 2017, 12:27 PM IST
J -13 Rice Type Non allalam cultivated in all seasons



விவசாயிகள் அணைக்கட்டு பாசனம் கிடைக்காத சூழ்நிலையில் நெல் சாகுபடியை கிணற்றுப்பாசனத்தில் செய்யலாம்.

ஜே-13 என்ற 100 நாள் நெல் ரகத்தினை சாகுபடி செய்வோர், செழிப்பைக் கொடுக்க வயலுக்கு கணிசமான அளவு மக்கிய தொழு உரம் இடலாம்.

Latest Videos

undefined

பயிர் வரிசைகளின் இடைவெளிகளிலும் உயிர் உரங்கள், உலர்ந்த தொழு உரக் கலவைகள் இடலாம். உடனே பயிர் வரிசை இடையில் களையெடுக்கும் கருவிகளை உபயோகிப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் இந்த ரகம் வறட்சியைத் தாங்கிக் கொள்கிறது.

நடவின் சமயம் 10 கிலோ பொடி செய்யப் பட்ட ஜிங்க் சல்பேட்டினை இடவேண்டும். நடவு நட்ட 15ம் நாள் யூரியா 25 கிலோ அளவினை 5 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் கலந்து ஒரு இரவு வைக்கப்பட்டு மறுநாள் வயலுக்கு இடலாம்.

பாஸ்போ பாக்டீரியா தொழு உரத்தோடு கலந்து வயலுக்கு இடலாம். திறமையாக களை எடுப்பதால் வேர் வளர்ச்சி ஊக்கப்பட்டு பயிர் அதிக அளவில் தூர்கள் பிடிக்கும். தூர்களில் திரட்சியான கதிர்களும் பிடிக்கும்.

ஜே-13 பயிர் வயலில் 75 நாட்கள் தங்கி இருந்து, பயிர் நாற்றுவிட்ட 100வது நாளில் அறுவடைக்கு வந்துவிடும்.

பயிர் சாகுபடிக்கு ரூ.13,000 லிருந்து 15,000 வரை விவசாயிகள் செலவு செய்கின்றனர். 35 மூடை மகசூல் எடுக்கலாம். இதன் மதிப்பு சுமார் ரூ.22,800 இருக்கும். ஏக்கரில் ரூ.12,000 வரை லாபம் எடுக்கலாம்.

இந்த ரகத்தில் கணிசமான அளவு வைக்கோல் கிடைக்கின்றது. விவசாயிகள் ஜே-13 ரகத்தில் நல்ல பலன் அடைவார்கள்.

நெல் சாகுபடியில் நெல் மகசூலோடு வைக்கோல் மகசூலும் முக்கியமானது. நமது நாட்டில் கறவை மாடுகள், கன்றுகள், வண்டிகளை இழுக்கும் வண்டிமாடுகள் போன்றவைகள் உள்ளன. இவைகளுக்கு தவிடு, புண்ணாக்கு கொடுத்தாலும் அவைகளின் வயிறு நிரம்ப அதிக அளவு வைக்கோலும் அவசியம். வைக்கோல் பஞ்சு போல் இருக்கும். ஜே-13 ரகத்தில் வைக்கோல் அதிக அளவு கிடைப்பதோடு அதன் விலை மற்ற ரகங்களின் வைக்கோலின் விலையைவிட சற்று அதிகமாகும்.

சாகுபடியில் ஒரு சில ரகங்களை குறிப்பிட்ட பட்டத்தில்தான் சுலபமாக சாகுபடி செய்ய முடியும். ஆனால் ஜே-13 ரகத்தை எல்லா பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.

click me!